49 கானா காதல்

1.2K 64 14
                                    

49 கானா காதல்

ஜமால் கூறிய அனைத்தும், தனக்கே தெரியாமல் தன்னை சுற்றி நிகழ்ந்திருக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை முகிலனால். அவர் கூறுவதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, இலக்கியா அவன் எண்ணியதை விட அதிகமாய், பைத்தியக்காரத்தனமாய் அவனை காதலித்திருக்கிறாள். நான்கு ஆண்டுகள் ஒருவரை காதலிப்பது என்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்லவே... அதுவும் அந்த நபருக்கே தெரியாமல்! அது மதில் மேல் பூனை போன்ற சமாச்சாரம். அவளது எதிர்காலம் குறித்த தெளிவே இல்லாமல் அவள் இருந்திருக்க வேண்டும். அவனது முதல் திருமணத்திற்கு முன்பு அவனை காதலிக்க ஆரம்பித்தவள், அவளது மனதை மாற்றிக் கொள்ளாமல், அவன் சிறைக்கு சென்ற பின்னும் அவனை தொடர்ந்து காதலித்திருக்கிறாள். அவளது காதல் அவ்வளவு ஆழமானதா? அவனை அழித்து ஒழிப்பதையே குறிக்கோளாக கொண்டிருந்த அவனது மனைவியின் இல்லாத காதலுக்காக அவன் காத்திருந்த அதே நேரத்தில், அவனையே நினைத்து ஒரு பெண் அழுது கொண்டிருந்திருக்கிறாள்! வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது! அது தன்னுள் எதை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதே புரிவதில்லை! ஒருவேளை அவனுக்கு தன் மனைவியைப் பற்றிய உண்மை தெரியாமலேயே போயிருந்தால்...? அவன் அவளுக்காகவே காத்திருந்திருந்தால்? இலக்கியாவின் வாழ்க்கை என்னவாகி இருக்கும்?

மேசை மீதிருந்த இலக்கியாவின் கைபேசி அவன் கண்களில் பட்டது. அவள் என்ன பெயரில் தன் எண்ணை சேமித்து வைத்திருந்தாள் என்பது அவன் நினைவுக்கு வந்தது, சோல்மேட். அந்த பெயரை அவள் கைபேசியில் பார்த்தபோது அவனுக்கு வியப்பாய் இருந்தது. ஆனால், அதற்கு பின்னால் சொல்லப்படாத ஒரு கதை இருக்கும் என்று அவன் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. சோல்மேட்... ஆத்ம உறவு என்பது எவ்வளவு கனம் நிறைந்த வார்த்தை! அவன் அதற்கு அருகதையானவனா?

அவள் தனது கைபேசிக்கு எந்த கடவு சொல்லையும் வைக்கவில்லை என்று அவனுக்கு தெரியும். அடுத்தவருடைய கைபேசியை, அவர் அனுமதியின்றி எடுத்துப் பார்ப்பது நாகரீகமற்ற செயல் என்பதும் அவனுக்கு தெரியும். ஆனால் இப்பொழுது அவன் அந்த நாகரீகத்தைப் பற்றி யோசிக்கும் நிலையில் இல்லை. அவள் கைபேசியை எடுத்து, அவன் குறித்த விபரம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான். ஆனால் அதில் ஒன்றுமில்லை.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now