38 இழந்த தூக்கம்

1.2K 65 7
                                    

38 இழந்த தூக்கம்

அனைவருடனும் வரவேற்பறையில் அமர்ந்து, தேநீர் பருகிக் கொண்டிருந்தாள் இலக்கியா.

"இலக்கியா, உன்னோட கை பக்குவம் ரொம்ப சூப்பர். அது டீயா இருந்தாலும் சரி, ஸ்வீட்டா இருந்தாலும் சரி" என்றார் தாரணி.

"தேங்க்ஸ் அத்தை" என்றபடி தன் கையில் இருந்த பிஸ்கட்டை டீயில் நனைத்து சாப்பிட்டாள்.

"இன்னிக்கு நீங்க சமைச்சிருந்த வெண்டைக்காய் பொறியல் சூப்பரா இருந்தது" என்றான் கபிலன்.

"எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு கூட ரொம்ப பிரமாதமா இருந்தது" என்றான் பரணன்.

அவர்களது புகழ்ச்சி உரையை தலையசைத்து ஏற்றுக் கொண்டாள் இலக்கியா. அப்பொழுது முகிலன் உள்ளே நுழைவதை பார்த்து அவள் முகம் பிரகாசம் அடைந்தது. தன் கோட்டை கழட்டி, அவன் தன் தோளில் போட்டபடி வந்தான்.

"முகி..."

சோபாவிலிருந்து எழுந்த அவள், அவனை நோக்கி விரைந்தாள். அவன் தோளில் அணிந்திருந்த கோட்டை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டாள். அவன் கையிலிருந்து அவனது கணினி பையை அவள் பெற முயன்ற போது, அதை பின்னால் இழுத்து,

"இலக்கியா, ரிலாக்ஸ்..." என்றான்.

விடாப்பிடியாக அவன் கையில் இருந்த பையை எட்டி பறித்துக் கொண்டு,

"இப்ப சொல்லுங்க" என்றாள்.

ஒன்றுமில்லை என்றபடி தலையசைத்து, தங்கள் அறையை நோக்கி நடந்தான்.

"உங்களுக்கு நான் காபி கொண்டு வரட்டுமா, முகி?"

"இப்ப வேண்டாம்"

"ஓகே..." என்றபடி அவனை பின் தொடர்ந்த அவள், ஆதிரையை பார்த்து *நான் அப்புறமா வரேன்* என்றபடி சைகை செய்தாள்.

சரி என்று சிரித்த படி தலையசைத்தார் ஆதிரை.

"டக்குனு அவ எப்படி சுறுசுறுப்பா மாறிட்டா பாத்தியா கா...?" என்றார் தாரணி.

"அம்மா, எல்லா பொண்ணுங்களும் அவங்களுக்கு பிடிச்சவங்களை பார்த்தா அப்படித்தான் ஆவாங்க" என்றான் கபிலன்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now