9 முதல் சந்திப்பு

1.3K 70 8
                                    

9 முதல் சந்திப்பு

இரண்டு நாட்களுக்கு பிறகு...

மணி ஏழுக்கு மேல் ஆகிவிட்டிருந்த போதிலும், இன்னமும் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தான் இளங்கோ. அப்பொழுது அவனது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

"மிஸ்டர் இளங்கோ?" என்றான் ஒருவன்.

"ஆமாம் சொல்லுங்க" என்றான் தான் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தாமல் இளங்கோ.

"என்ன ஃப்ரெண்ட் நீங்க?"

அந்த விசித்திரமான கேள்வியை கேட்ட இளங்கோ, தனது பார்வையை அந்த கோப்பில் இருந்து அகற்றி,

"என்ன்னன?" என்றான் முகத்தை சுருக்கி.

"உங்க ஃப்ரெண்ட் முகிலன் ஏற்கனவே மனசு உடைஞ்சு போயிருக்காரு... போதாத குறைக்கு, அவரோட அப்பா அம்மா வேற அவருக்கு பொண்ணு தேடிகிட்டு இருக்காங்க"

"யாரு பேசுறீங்க? என் ஃபிரண்டை பத்தி பேச நீங்க யாரு?" என்றான் கோபமாய்.

அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல்,

"நற்கிள்ளி தன் மகளை முகிலனுக்கு கொடுக்க தயாரா இருக்காருன்னு ரொம்ப சந்தோஷப்படாதீங்க. கண்ணை மூடிக்கிட்டு எல்லாரையும் நம்புற தப்பை மறுபடியும் செய்யாதீங்க" என்று எச்சரித்தது அந்த குரல்.

எந்த குறுக்கீடும் செய்யாமல் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான் இளங்கோ. ஏனென்றால் அந்த நபர் பேசியது மிகவும் முக்கியமான விஷயம்.

"கல்யாணத்துக்கு ஒத்துக்கிறதுக்கு முன்னாடி, நற்கிள்ளி மகளைப் பத்தி விசாரிங்க. அவளைப் பத்தி தரோவா  தெரிஞ்சுக்கங்க. இந்த தடவையாவது எந்த தப்பும் நடக்காம பார்த்துக்கோங்க"

அழைப்பு துண்டிக்கப்பட்டது. இளங்கோ ஆச்சரியமானான். யார் அந்த மனிதன்? எதற்காக அவன் தன்னை எச்சரிக்கிறான்? அவனுக்கு நற்கிள்ளியின் மகளை பற்றி ஏதாவது விஷயம் தெரிந்திருக்குமோ? பெண்பாவிற்கு இருந்தது போன்ற ஒரு இருண்ட பக்கம் அவளுக்கும் இருக்க கூடுமோ? என்று எண்ணிய போதே இளங்கோவிற்கு கை கால்கள் நடுங்கின.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora