6 இலக்கியாவின் தேர்வு

1.1K 64 4
                                    

6 இலக்கியாவின் தேர்வு

இலக்கியாவிடம் அந்த கேள்வியை கேட்டுவிட்டு, அங்கிருந்து செல்லலாம் என்று புன்னகையுடன் எழுந்து நின்றார் நற்கிள்ளி. அவரது கரத்தை பற்றினாள் இலக்கியா. அவளை திரும்பி பார்த்தார் அவர்.

"உங்களுக்கு (என்பதை அழுத்தி) எந்த பிரச்சனையும் இல்லனா, நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றாள் அவரது கண்களை சந்தித்தபடி தைரியமாக.

அவள் கண்களில் இருந்து தன் கண்களை அகற்றாமல், மீண்டும் அவள் பக்கத்தில் அமர்ந்தார் நற்கிள்ளி.

"என் வாழ்க்கை சந்தோஷமா இல்லன்னா, என்னைவிட அதிகமா கவலைப்பட போறது நீங்க தானே பா? அப்படின்னா, இது உங்க பிரச்சனை. என் பிரச்சனை இல்ல" என்றாள்.

தன்னைவிட நுண்ணறிவு வாய்ந்த தன் மகளை வியப்புடன் பார்த்தார் நற்கிள்ளி.

"ஆனா, அவன் கூட காலமெல்லாம் வாழ போறது நீ தான்" என்றார் நற்கிள்ளி.

"என் வாழ்க்கையில எது வந்தாலும் அதை ஏத்துக்கிற மனபக்குவம் எனக்கு இருக்கு. ஒருவேளை முகிலன் எனக்குன்னு நிர்ணயிக்கப்பட்டவரா இருந்தா, அது எனக்கு சம்மதம் தான். என்னோட பெஸ்ட்டை நான் கொடுக்க முயற்சி செய்வேன்"

அவள் கூறியது அசைக்க முடியாத உறுதிமொழி என்று உணர்ந்த நற்கிள்ளி, அவள் தலையை அன்போடு வருடி கொடுத்தார்.

"முகிலன் ரொம்ப நல்லவன் மா. அவன் வாழ்க்கையில விதி ரொம்ப மோசமா விளையாடிடுச்சு. அவன் சந்தோஷமா வாழ எல்லா தகுதியும் உடையவன். அவனுக்கு உன்னை மாதிரி புரிதல் உள்ள வேற ஒரு பொண்ணு கிடைப்பான்னு நான் நம்பல. இளஞ்செழியனும் ஆதிரையும் யாருக்கும் கிடைக்க முடியாத ரொம்ப நல்ல மாமனார் மாமியார இருப்பாங்க"

"உங்க முடிவு எப்பவும் சரியா தான் பா இருக்கும். நீங்க எங்க நல்லதுக்காக தான் எதையும் செய்வீங்க" என்றாள்.

பெருமையாய் உணர்ந்தார் நற்கிள்ளி என்பது பொருந்தாது, இலக்கியா அவரை பெருமையாய் உணர வைத்தாள் என்பதே சரி.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now