53 சுயகட்டுப்பாடு

1.3K 64 6
                                    

53 சுயகட்டுப்பாடு

தங்கள் அறைக்கு வந்த முகிலன், அங்கு இலக்கியாவை காணாமல் தேடினான். குளியலறையின் அருகில் வந்த அவன், உள்ளிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, சுவற்றில் சாய்ந்த படி நின்றான். தன் ஈர முகத்தை துண்டால் துடைத்தபடி வெளியே வந்தாள் இலக்கியா. அவளை முகிலன் பற்றி இழுக்க, அவள் திடுக்கிட்டாள். அவளது கண்கள் விரிவடைந்தன.

"என்னங்க?" திணறினாள் அவள்.

"உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்"

சொல்லுங்க என்பது போல் அவள் தலையசைக்க, அவள் காதருகே குனிந்த அவன்,

"ஐ லவ் யூ" என்றான்.

அதைக் கேட்டு புன்னகைத்தாள் இலக்கியா.

"ஐ டூ..."

அவளை இடை மறித்து,

"எனக்கு தெரியும்... கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாத, யாருக்கும் கிடைக்க முடியாத காதல் உன்னுடையது" என்றான்.

அவள் புன்னகையுடன் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

"எனக்கு இது தான் வேணும்"

தன் தலையை உயர்த்தி, அவனை பார்த்து புன்னகை புரிந்தாள் இலக்கியா. அவள் முகத்தை கையில் ஏந்தி அவளை நோக்கி குனிந்தான். கண்களை மூடி அவன் தரும் முத்தத்தை ஏற்க தயாரானாள் இலக்கியா. தன் இதழ்களை அவள் இதழ்களின் மீது ஒற்றினான் முகிலன். அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அவர்கள் இருவரும், கதவை நோக்கி திரும்பினார்கள். அந்த சத்தம் வித்தியாசமாய் இருந்தது. ஆதிரை இது போல் கதவை தட்ட மாட்டார். அப்பொழுது அவர்கள்,

"மாமி கதவை திறங்க" என்ற இரட்டை குரலை கேட்டார்கள். அது மலர்விழியும், சுடர்விழியும். தேனிசையின் மகள்கள்.

முகிலனின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. இலக்கியா அவனிடமிருந்து விடுபட நினைத்தபோது, மீண்டும் அவளை தன்னிடம் இழுத்து, அவள் உதட்டில் தன் உதடுகளை ஒற்றினான். இலக்கியா சென்று கதவை திறந்தாள். அங்கு நின்றிருந்த இரட்டையரை பார்த்து புன்னகைத்தாள்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now