10 கிள்ளியின் மகள்
மாலை
இலக்கியாவை பற்றிய குறிப்புகள் அடங்கிய கோப்பு கிடைக்கப்பெற்றான் இளங்கோ. அது தெளிந்த நீரோடை போல் தெள்ளத்தெளிவாய் இருந்தது. குற்றம் என்று கூறுவதற்கும் எதுவும் இல்லை, இலக்கியாவை பற்றி கவலைப்படவும் எதுவும் இல்லை.
அவனுக்கு ஒரு விஷயம் தான் புரியவில்லை. எதற்காக அந்த மர்ம மனிதன் அவனுக்கு ஃபோன் செய்து அவளைப் பற்றி விசாரிக்க சொன்னான்? அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? அவனது எண்ணம் என்னவாக இருக்கும்? எது எப்படியோ இலக்கியா நல்ல பெண். அவளை முகிலனுக்கு மணமுடித்து வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதை பற்றி ஆதிரையிடம் கூற, முகிலனது இல்லம் செல்ல வேண்டும். முகிலனும் ஏற்கனவே வீட்டிற்கு சென்று விட்டான். இந்த விஷயத்தை முகிலனின் காதில் எப்படியாவது போட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் இளங்கோ.
முகிலன் இல்லம்
இலக்கியாவை பற்றி எண்ணியபடி வீடு வந்து சேர்ந்தான் முகிலன். அவளது அழகிய முகம், துறுதுறுவென்ற கண்கள், கலங்கமற்ற புன்னகை, ஆழமான சிந்தனை திறன், பரந்த மனப்பான்மை, மனமுதிர்ச்சி, குழந்தைத்தனம்...! அவளது நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டான் முகுந்தன். அவனுக்கு என்ன முடிவு செய்வதென்று தெரியவில்லை. அவனுக்கு உறுதியாய் தெரியும், அவளைப் போன்ற, அழகான, மனமுதிர்ச்சி உடைய, நல்லுள்ளம் கொண்ட பெண் நிச்சயம் அவனுக்கு கிடைக்க மாட்டாள். ஆனால், தன்னுடைய உணர்வுகளைப் பற்றி அவனுக்கே தெளிவில்லாத போது, அவன் திருமணத்திற்கு எப்படி சம்மதம் தெரிவிக்க முடியும்? அவளுடைய அம்மாவும் அண்ணனும் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்தது அவனுக்கு தெரியும். அவர்கள் முழு மனதோடு இந்த திருமணத்திற்கு சம்மதிப்பார்களா? அது நிச்சயம் இல்லை.
காரை நிறுத்திவிட்டு, வழக்கம் போல் வேகமாய் வீட்டிற்குள் நுழைந்தான் முகிலன். அங்கு அவனது முன்னாள் மாமனார் மதிவாணனையும், பெண்ணிலாவையும் பார்த்த போது அவனது கால்கள் வேகம் இழந்தன.
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...