24 திருமதி முகிலன்

1.3K 61 9
                                    

24 திருமதி முகிலன்

இலக்கியா கிளம்பிச் சென்ற பிறகு, தன் அறைக்கு சென்றான் முகிலன். தேனிசையின் குடும்பத்தை வழி அனுப்ப, அவன் அங்கு இருக்க விரும்பவில்லை. அவனது நடவடிக்கையை கவனித்த ஆதிரை, ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டார். தேனிசையின் கணவன் திருக்குமரன், முகிலனை பற்றி விசாரித்தான்.

"முகிலன் எங்க போனாரு?"

"அவன் அவனுடைய ரூம்ல இருக்கான்" என்றார் இளஞ்செழியன்.

முகிலனின் அறையை நோக்கி நடந்த திருக்குமரன், அவனது அறையின் கதவை தட்டினான். கதவை திறந்து திருக்குமரனை பார்த்த முகிலன்,

"உள்ள வாங்க மாமா" என்றான்.

உள்ளே நுழைந்த திருக்குமரன்,

"நாங்க கிளம்பறோம் முகிலன்" என்றான்.

"சரிங்க மாமா... போயிட்டு வாங்க"

அங்கிருந்து செல்ல எத்தனித்த திருக்குமரன், மீண்டும் நின்று, முகிலனை பார்த்து,

"நீங்க இன்னைக்கு இலக்கியா பக்கத்துல ரொம்ப நல்லா இருந்தீங்க. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல பேர்" என்றான்

மென்மையாய் புன்னகைத்தான் முகிலன்.

"நான் கிளம்புறேன்"

சரி என்று தலையசைத்த முகிலன், திருக்குமரனை தொடர்ந்து வந்தான், தன்னை வந்து பார்த்து, மரியாதையுடன் நடந்து கொண்ட அவனுக்கு உரிய மரியாதை வழங்க.

இதற்கிடையில்...

தேனிசையை சமையலறைக்கு அழைத்து வந்தார் ஆதிரை.

"என்ன விஷயம் மா?" என்றாள் தேனிசை.

அவளை அணைத்துக் கொண்ட ஆதிரை, அவளது நெற்றியில் முத்தமிட்டார்.

"என்னம்மா ஆச்சு உங்களுக்கு?" என்று சிரித்தாள் தேனிசை.

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டி" என்றார் ஆதிரை.

"தேங்க்ஸா? எதுக்கு?" என்றாள் புன்னகையுடன்.

"நம்ம சின்னுவுக்கு உன் நாத்தனாரை கொடுக்க மாட்டேன்னு சொன்னதுக்கு..."

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now