35 தனிப்பிறவி

1.2K 64 6
                                    

35 தனிப்பிறவி

முகிலனின் கோப வெடிப்புக்கு பிறகு உணவு மேசை அமைதியாகி போனது. சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு சென்றான் முகிலன். அவனுடன் செல்லச் சொல்லி, இலக்கியாவுக்கு சைகை செய்தார் தாரணி. சரி என்று தலையசைத்து விட்டு அவனுக்கு பின்னால் ஓடினாள் இலக்கியா.

"அவன் என்கிட்ட எப்படி பேசினான் பாத்தீங்களா? மரியாதைனா என்னன்னு அவனுக்கு மறந்து போச்சு" என்று பொருமினாள் தேனிசை ஆதிரையிடம்.

"அவன் என்ன சொன்னான்னு நீ கேட்கலையா? அவங்க பர்சனல் விஷயத்துல நீ தலையிடாம இருக்குறது தான் நல்லது. அவன் பொண்டாட்டி, அவனை பேர் சொல்லிக் கூப்பிடனும்னு அவன் விருப்பப்படுறான். நீ எதுக்கு உன் மூக்கை கொண்டு போய் அதுல நுழைக்கிற?" என்றார் இளஞ்செழியன்.

"நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? அவனைவிட அவ ரொம்ப சின்ன பொண்ணு. அதுக்காகத்தான் மரியாதையா கூப்பிட சொன்னேன்"

"தேனு... நம்ம இதை பத்தி பேசாம இருக்குறது நல்லது. இலக்கியா, முகிலனை பேர் சொல்லி தான் கூப்பிடுவா..." என்றார் ஆதிரை.

"என் பசங்களுக்கு ஸ்கூல் லீவாச்சே... இங்க வந்து கொஞ்ச நாள் இருக்கலாம்னு நினச்சேன். ஆனா, இங்க எனக்கு கொஞ்சம் கூட மரியாதையே இல்ல. நான் திரும்பி எங்க வீட்டுக்கு போறேன்"

"உன்னை யாரும் இங்கிருந்து போக சொல்லல. உனக்கு எவ்வளவு நாள் தங்கணும்னு தோணுதோ நீ தங்கலாம். முகிலன், இலக்கியா விஷயத்துல நீ தலையிடாம இருந்தா தாராளமா இங்க இரு..." என்றார் இளஞ்செழியன்.

ஒன்றும் கூறாமல் உணவு மேசையை விட்டு சென்றாள் தேனிசை.

.........

தங்கள் அறையின் உள்ளே நுழைந்து கதவை மூடிய இலக்கியா,

"வாவ்...! என்ன ஒரு ஆக்ஷன்...!  நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..." என்று சிரித்தாள்.

புன்னகைத்தான் முகிலன்.

"நான் ஒரு நிஜ ஹீரோவை பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல" என்றாள்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now