23 டியர்...

1.2K 61 13
                                    

23 டியர்...

முகிலனின் முக மாற்றத்தை கவனித்த இலக்கியா, பின்னால் திரும்பிப் பார்த்தாள். அதற்குள் அவர்களை நெருங்கி வந்து விட்டாள் தேனிசை. பார்ப்பதற்கு, மாருதியின் ஓவியம் போல், திருத்தமாய் இருந்த இலக்கியாவை பார்த்து அவள் வாயடைத்து போனாள். முகிலனுக்கு வர இருக்கும் மணமகள் இவ்வளவு அழகானவளா?

"நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்றாள் தேனிசை இலக்கியாவிடம்.

யார் இவர்கள்? என்பது போல் முகிலனை ஏறிட்டாள் இலக்கியா.

"இவங்க என் அக்கா தேனிசை" என்றான் முகிலன்.

அது தேனிசைக்கு பெரிய அதிர்ச்சி தான். இலக்கியாவின் பார்வைக்கு முகிலன் பதில் கூறுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

தேனிசையை பார்த்து புன்னகைத்த இலக்கியா, குனிந்து, அவள் கால்களை தொட்டாள். அவள் முகிலனுக்கு அக்கா அல்லவா!

"நீ இப்படி சின்னுகிட்ட எல்லாருக்கும் முன்னால வெளிப்படையா நின்னு பேசுறதை பார்த்தா, மத்தவங்க என்ன நினைப்பாங்க?" என்றாள் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு.

அதைக் கேட்டு இலக்கியா சிரிக்க, முகத்தை சுருக்கினாள் தேனிசை.

"நீங்க சொல்றது சரி தான். நம்ம இப்படி வெளிப்படையா எல்லாரும் பாக்குற மாதிரி பேசக்கூடாது இல்ல?" என்று முகிலனிடம் கேட்க, அவன் தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான்.

தேனிசை பக்கம் திரும்பிய இலக்கியா,

"நான் தனியா எல்லாம் அவர்கிட்ட பேசமாட்டேன் கா. கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி எல்லாம் செய்றது தப்பு" என்று தேனிசைக்கு அறிவுரை கூறினாள்.

வாயடைத்துப் போன தேனிசை, இவள் என்ன ரகம்?என்பது போல் அவளை பார்த்தாள்.

"உங்களோடது லவ் மேரேஜின்னு கேள்விப்பட்டேன். அதனால தான் எங்களுக்கு நீங்க ஐடியா கொடுக்குறீங்க... அப்படித்தானே? நீங்க ரொம்ப ஸ்வீட்" என்று அவளை அணைத்துக் கொண்டாள் இலக்கியா, தேனிசையை திகைப்புறச் செய்து.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now