30 ஆரம்பம்

1.2K 61 8
                                    

30 ஆரம்பம்

தன் மருமகள் சமைப்பதை ஆர்வமாகவும் நுணுக்கமாகவும் கவனித்துக் கொண்டிருந்தார் ஆதிரை. காலை சிற்றுண்டிக்காக பூரியுடன் மல்லிமசால் சமைத்த இலக்கியா, முகிலனுக்காக பாதாம் அல்வாவும் சமைத்தாள்.

அவள் சமைத்த விதத்தை பார்த்து அசந்து போனார் ஆதிரை. சொற்ப நேரத்தை எடுத்துக்கொண்டு வெகு வேகமாய் சமைத்து முடித்தாள் அவள். அவற்றை உணவு மேஜிக்கு கொண்டு வந்தாள்.

"கபி, போய் சின்னுவை கூட்டிகிட்டு வா" என்றார் ஆதிரை, கபிலனிடம்.

"சரி பெரியம்மா" என்று கபிலன் அங்கிருந்து செல்ல நினைத்தபோது,

"அம்மா, அவரை நான் கூட்டிக்கிட்டு வரேன்" என்றாள் இலக்கியா.

"பரவாயில்ல இலக்கியா, நான் கூட்டிட்டு வரேன்" என்றான் கபிலன்.

"கபி, நீ இரு. அவ போய் கூட்டிக்கிட்டு வரட்டும்" என்றார் ஆதிரை.

"சரி" என்று தோள்களை குலுக்கினான் கபிலன்.

தங்கள் அறைக்குச் சென்ற இலக்கியா, முகிலன் பால்கணி வாசலில் நின்று, அங்கு வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிகளை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள்.

"முகி..."என்று அவள் அழைக்க, அவளை திரும்பி பார்த்தான்.

"வாங்க சாப்பிடலாம்" என்றாள்.

சரி என்று தலையாட்டிவிட்டு இலக்கியாவுடன் தரைதளம் நோக்கி நடந்தான்.

அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த ஆதிரை, திருப்தி புன்னகை சிந்தினார்.

அனைவரும் உணவு மேசையில் கூறினார்கள். தேனிசையின் மகள்களான சுடர்விழியும், மலர்விழியும் பூரி, மல்லிமசாலாவை விரும்பி சாப்பிட்டார்கள்.  இளஞ்செழியனுக்கும் ஆதிரைக்கும் கூட அவளது கை பக்குவம் மிகவும் பிடித்திருந்தது.

"ரொம்ப நல்ல ப்ரேக்ஃபாஸ்ட் அண்ணி" என்றான் பரணன்.

புன்னகைத்து அவன் புகழுரையை ஏற்றாள் இலக்கியா.

"இலக்கியா, உனக்கு அவ்வளவு என்ன அவசரம்? கடுகு பொறியவே இல்ல" என்றாள் தேனிசை வழக்கம் போல் குற்றம் கூறும் நோக்கில்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now