31 அம்மா வீடு

1.3K 58 8
                                    

31 அம்மா வீடு

முகிலனுடன் தன் வீட்டிற்கு செல்வதற்கு ஆர்வமாய் இருந்தாள் இலக்கியா. அவனுடன் சந்தோஷமாய் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

"அம்மா என்னை எங்க அம்மா வீட்ல விட சொல்லி கபிலன் கிட்ட சொன்ன போது நான் ரொம்ப டிசப்பாயின்ட் ஆயிடுட்டேன்" என்றாள்.

ஒன்றும் கூறாமல் அவளை பார்த்தான். ஆம், அவனும் கூட ஏமாற்றம் அடைந்தான் தான். அவள் தன்னுடன் தான் வர விரும்புகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. அவளது அடுத்த வார்த்தைகள் அதை நிரூபித்தன

"என்னோட வாழ்க்கை பயணம், என் புருஷனோட ஆரம்பம் ஆயிடுச்சு... இல்ல?" என்றாள்.

மென்மையான புன்னகை தந்தான் அவன்.

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? உங்க உதடுகள் சிரிக்கிறத விட உங்க கண்ணு அதிகமாக சிரிக்கிறது" என்றாள் சிரித்தபடி.

அதைக் கேட்டு சங்கடத்திற்கு ஆளானான் முகிலன். அவன், சிரிக்காமல் அவன் உதடுகளை தடுத்து விட முடியும். ஆனால் அவன் கண்களை என்ன செய்வது? அவனது மனதில் எழும் எண்ண எழுச்சிகளை அவை உடனடியாய் வெளிப்படுத்தி விடுகின்றன. அவனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அப்படி அவன் அதை மறைக்க வேண்டும் என்று நினைத்தால், கூலிங் கிளாஸ் தான் அணிய வேண்டும், என்று எண்ணினான் முகிலன்.

"யாருக்கு தெரியும்? ஒருவேளை உங்க கண்ணை என்கிட்ட இருந்து மறைக்க நீங்க கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல" என்று அவள் சிரிக்க,

அவன் அதிர்ந்து போனான். அவள் ஏனோ தானோ என்று அதைப் பேசினாளா? அல்லது, அவன் மனதில் நினைப்பதை உணர்ந்து பேசுகிறாளா?

"உங்களுக்கு நானே ஐடியா கொடுக்கிறேன் போல தெரியுது...?" என்றாள்.

அவன் மீண்டும் சிரித்தான்.

அப்போது அவர்கள் முதன்முறை சந்தித்துக் கொண்ட கோவிலை அவர்களது கார் கடந்தது.

"சின்னையா..." என்று அழைத்த அவளை, அதிர்ச்சியோடு பார்த்தான் அவன்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now