4 அழையா விருந்தாளி
இலக்கியாவின் வார்த்தைகள் நற்கிள்ளியின் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. தன் கடையின் கல்லாவில் அமர்ந்திருக்கிறோம் என்ற நினைப்பே அவருக்கு மறந்து போனது. இவ்வளவு மோசமான விஷயத்தை, நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்க்க முடியும் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. அவர் வியந்து தான் போனார். கோபத்தில் தன் மனைவியை அடித்து கொன்ற ஒருவனைப் பற்றி இவ்வளவு பரந்த உள்ளத்தோடு ஒரு பெண்ணால் யோசிக்க முடியுமா? அவர் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.
மாலை
தனது மடிக்கணினியில் ஏதையோ தேடிக் கொண்டிருந்தாள் இலக்கியா. அப்பொழுது, நற்கிள்ளி அவள் அறையின் வாசலில் நிற்பதை பார்த்து புன்னகைத்தாள்.
"உள்ள வாங்கப்பா"
உள்ளே வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார் நற்கிள்ளி.
"என்னப்பா, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க?"
"ஆமாம் டா. அம்மா எங்க?"
"இன்னைக்கு வெள்ளிகிழமை பா. அம்மா கோவிலுக்கு போவாங்கல்ல?"
"ஆமாம், நான் மறந்துட்டேன்"
"ஏன்னா, நீங்க எப்பவும் இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு வந்ததே இல்ல. அதனால தான் உங்களுக்கு தெரியல"
"ஆமாம். நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு நினைக்கிறேன்"
"சொல்லுங்கப்பா" என்று ஆவலோடு அவரை பார்த்தாள், அவர் என்ன பேசப் போகிறார் என்று தெரிந்து கொள்ள.
"இன்னைக்கு காலையில நம்ம ஒரு விஷயம் பத்தி பேசினோம். ஞாபகம் இருக்கா?"
"ஆமாம். நான் உங்களுக்கு கடையில் வந்து ஹெல்ப் பண்ண போறதா சொன்னேன். நீங்களும் என்னை அடுத்த வாரத்துல இருந்து வர சொல்லி இருந்தீங்க"
ஆமாம் என்று தலையசைத்த நற்கிள்ளி,
"நம்ம வேற ஒரு விஷயத்தை பத்தி கூட பேசினோம்"
"முகிலனை பத்தியா?"
"ஆமாம். அவன் விஷயத்துல உன்னோட பார்வை வேற மாதிரி இருக்கிறதை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷம்"
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...