20 சமாளிப்பு

1.2K 60 5
                                    

20 சமாளிப்பு

கபிலனுடன் முகிலனின் அலுவலகம் வந்து சேர்ந்தாள் இலக்கியா.

அவளை வரவேற்றான் இளங்கோ.

"ஹாய் இலக்கியா..."

"ஹாய் இளங்கோ..."

"என்னோட பேரு உங்களுக்கு எப்படி தெரியும்?"

"நான் நற்கிள்ளியோட டாட்டர். அதை மறந்துடாதீங்க" என்றாள்.

"ஆமாம்ல..."

"சின்னையா வந்தாச்சா?" என்றான் கபிலன்.

"பங்க்சுவலா வந்துட்டான்"

தன் கண்களை ஓடவிட்ட இலக்கியா, *முகிலன்* என்ற பெயர் பலகையை பார்த்து நிறுத்தினாள்.

"அது தான் முகிலனோட கேபின்"

"நான் போகலாமா?"

"தனியாவா போக போறீங்க?" என்று பதற்றமானான் கபிலன்.

"ஆமாம்... ஏன்?" என்றாள்.

"அவன் எங்களை மாதிரி இல்ல... கொஞ்சம் கம்மியா பேசுவான்"

"இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுது. கல்யாணத்துக்கு பிறகு கூட உங்கள்ல யாராவது என் கூட இருந்துகிட்டே இருக்க போறீங்களா?" என்றாள் நக்கலாய்.

கபிலன் தன் தலையை சொறிய, இளங்கோ முப்பத்தியிரண்டு பல்லும் தெரிய சிரித்தான்.

அவனது அறையை நோக்கி சகஜமாய் நடை போட்டாள் இலக்கியா.

"இளங்கோ, அவங்களை பாத்து சின்னையா டென்ஷன் ஆயிட்டா என்ன செய்றது?"

இளங்கோவுக்கு ஏனோ முகிலன் அப்படி செய்வான் என்று தோன்றவில்லை.

"சரி வா, போய் பாக்கலாம்" என்று அவனது அறையை நோக்கி நடந்தான் அவன்.

"இரு, நம்ம உள்ள போகாம வெளியில இருந்து அவங்க பேசுறதை கேக்கலாம்" என்றான் கபிலன்.

"அவங்க பேசுறத ஒட்டு கேக்குறது நாகரிகம் இல்ல" என்றான் இளங்கோ.

"ஆமாம்... இவன் பேச்சில அப்படியே காதல் ததும்பி வழிய போகுது பாரு..." என்றான் கிண்டலாய் கபிலன்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now