37 முகிலன் விடுத்த அழைப்பு
தேனிசையின் கணவன் திருக்குமரனது கைபேசி சிணுங்கியது. அதில் முகிலனின் பெயர் ஒளிர்ந்ததை பார்த்து அவன் ஆச்சரியமடைந்தான். எதற்காக முகிலன் அவனுக்கு இந்த நேரத்தில் அழைப்பு விடுக்க வேண்டும்? என்று எண்ணியபடி அந்த அழைப்பை ஏற்றான் திருக்குமரன்.
"ஹலோ முகிலன்..."
"எப்படி இருக்கீங்க மாமா?"
"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"
"நானும் நல்லா இருக்கேன். நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கத்தான் ஃபோன் பண்ணேன்"
"சொல்லுங்க, என்ன கேட்கணும்னு ஃபோன் பண்ணிங்க?"
"அக்கா நல்லா தானே இருக்காங்க? அவங்க இப்பல்லாம் ரொம்ப விசித்திரமா நடந்துக்கிறாங்க. மத்தவங்களை காயப்படுத்துறதை பத்தி கவலையே பட மாட்டேங்குறாங்க. அவங்க ஏன் இப்படியெல்லாம் செய்றாங்க?"
என்ன கூறுவது என்று புரியவில்லை திருக்குமரனுக்கு. அதற்கான காரணம் தெரிந்தால், முகிலன் என்ன நினைப்பான்?
"எனக்கு தெரியல முகிலன். எங்க வீட்ல அவ நார்மலா தான் இருக்கா..."
"ஆனா எங்க வீட்ல அப்படி இல்ல" என்றான் தயக்கமின்றி முகிலன்.
"அவ இலக்கியாவை ட்ரபிள் பண்றாளா?"
"ரொம்ப... அவங்க அதை தெரியாம செய்யறதா எனக்கு தோணல. எங்க எல்லாரையும் ரொம்ப அப்செட் பண்றாங்க"
"நீங்க கவலைப்படாதீங்க முகிலன். இதுக்கு நான் ஏதாவது செய்றேன்"
"தேங்க்ஸ் மாமா" என்று அழைப்பை துண்டித்து விட்டு நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த இலக்கியாவை ஏறிட்டான். சத்தம் இல்லாமல் பால்கனியின் கதவை தாளிட்டுக் கொண்டு அறைக்குள் வந்தான். விளக்கை அணைத்துவிட்டு வழக்கம்போல் சோபாவில் படுத்துக்கொண்டான்.
மறுநாள் காலை
தூக்கத்திலிருந்து கண்விழித்த முகிலன், இலக்கியா அந்த அறையில் இல்லாததை கவனித்தான். கண்களை கசக்கி கொண்டு எழுந்து அமர்ந்தான். தனது பூத்துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றான். குளித்து முடித்துவிட்டு தலையை துவட்டியபடி வெளியே வந்த அவன், இலக்கியாவை தேடினான். அவள் அப்போதும் அறையில் இல்லை.
STAI LEGGENDO
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Storie d'amoreஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...