15 நிபந்தனை
ஆதிரையை கோவிலில் சந்தித்துவிட்டு, வீடு வந்து சேர்ந்தாள் இலக்கியா. அப்போது அவளது கைபேசி ஒலித்தது. அந்த அழைப்பு, அவளுக்கு முன்பு வந்த அதே எண்ணிலிருந்து வந்தது... வெண்ணிலாவின் எண்ணில் இருந்து!
தனது அறைக்கு சென்று கதவை சாத்தி தாளிட்டுக் கொண்டு, சாவகாசமாய் கட்டிலில் அமர்ந்து, அந்த அழைப்பை எற்றாள்.
"இலக்கியா தானே பேசுறது?"
"ஆமாஆஆம்"
"எப்படி இருந்தாலும் முகிலனை கல்யாணம் பண்ணிக்க தான் போறேன்னு அன்னைக்கு சொன்னீங்க..."
அவளது பேச்சுக்கு ஊடே புகுந்து,
"இப்பவும் நான் அதையே தான் சொல்றேன்" என்றாள்.
"அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க என்ன செஞ்சாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?"
"என்ன செஞ்சாங்க?" என்றாள் சாதாரணமாய்.
"அவங்க டிடெக்டிவ் வச்சு உங்களை பத்தி விசாரிச்சிருக்காங்க... உங்க கடந்த காலம், உங்க கேரக்டர், எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டாங்க. அதுக்கு என்ன அர்த்தம்? அவங்க உங்க கேரக்டரை சந்தேகப்படுறாங்க. அவங்க உங்களை நம்பல"
"அப்படியா சொல்றீங்க? உண்மையிலேயே அவங்க டிடெக்டிவ் வச்சி என்னைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டாங்களா?"
"ஆமாம். நான் சொல்றது உண்மை"
"அப்ப்ப்பாடா... நல்ல காலம் அவங்க அப்படி செஞ்சாங்க..."
"என்ன்னனது?" என்றார் வெண்ணிலா நம்ப முடியாமல்.
"ஆமாம், இதுக்கப்புறம் நான் நிம்மதியா இருப்பேன்ல? முகிலனை எப்படி என்னை நம்ப வைக்கிறதுன்னு நான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இனிமேல் நான் அதைப்பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. அவங்களே அதை செஞ்சு என்னை பத்தி தெரிஞ்சிக்கிட்டாங்களே...!
"உனக்கு என்ன பைத்தியமா? அவங்க உன்னை சந்தேகப்படுறாங்க... அப்படின்னா, உனக்கு வேற யார் கூடவாவது தொடர்பு இருக்கலாம்னு அவங்க நினைக்கிறாங்க"
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...