12 இயலாமை

1.1K 61 4
                                    

12 இயலாமை

தன் அம்மாவிற்கு மனதிற்குள் நன்றி கூறினான் முகிலன். அவனது ஒப்புதலுக்காக அவர் காத்திருக்கவில்லை அல்லவா...! அவன் தனக்கு திருமணம் வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ கூறும் நிலையில் இல்லை. வேண்டாம் என்று கூற அவனுக்கு மனம் வரவில்லை. மரியாதைக்குரிய அந்த பெண்ணை வேண்டாம் என்று எப்படி அவனால் கூறி விட முடியும்? இலக்கியாவை அவனுக்கு மணமுடித்து வைத்தே தீருவது என்ற ஆதிரையின் பிடிவாதம் அவனுக்கு நிம்மதியை தந்தது. ஏனெனில், இதற்குப் பின் அவன் தனது விருப்பத்தை கூற வேண்டிய அவசியம் இல்லை அல்லவா! அவன் அம்மா, அவன் கூறுவதை நிச்சயம் கேட்கப் போவதில்லை. அவர் நிச்சயம் அவனுக்கு இலக்கியாவை திருமணம் செய்து வைத்துவிடுவார் என்று நம்பினான் அவன்.

ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டதால், இலக்கியாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்கப் போவதாய் அவனது அம்மா கூறியது, உண்மையிலேயே நடக்கப் போகிறதா என்று எண்ணிய படி, அவசரமாய் அலுவலகத்திற்கு செல்ல தயாராகி கீழ்தளம் வந்தான் முகிலன்.

அவன் தரைத்தளம் வந்த போது, தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேசினார் ஆதிரை. அவர் பேசியதை கேட்டு அப்படியே நின்றான். ஏனென்றால் அந்த அழைப்பு அவனது நண்பன் இளங்கோவிடமிருந்து வந்திருந்தது.

"சொல்லுப்பா, இளங்கோ..."

"அம்மா, நான் ஸ்வீட் வாங்க கிள்ளி அங்கிள் கடைக்கு வந்தேன். அவர் கடையில இல்லாததுனால இங்க வேலை செய்றவங்க கிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?" என்று தயங்கினான்.

"என்னப்பா சொன்னாங்க?"

"இன்னைக்கு இலக்கியாவை பொண்ணு கேட்டு யாரோ அவங்க வீட்டுக்கு வராங்களாம்"

"என்ன்னனது?" என்று அதிர்ந்தார் ஆதிரை.

"ஆமா மா, அதனால தான் அவர் இன்னைக்கு கடைக்கு வரலையாம். என்னம்மா இதெல்லாம்? எதுக்காக மா கிள்ளி அங்கிள் இப்படி பண்றாரு?"

"எனக்கும் என்னன்னு தெரியலையே பா... இன்னைக்கு கிள்ளி அண்ணன் வீட்டுக்கு கூட வரல. அவர் எப்பவும் இங்க வாரம இருந்ததே இல்ல"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now