27 நலங்குதனது பொறுமையை இழந்து கொண்டிருந்தான் முகிலன், இலக்கியா அவனுக்கு ஃபோன் செய்யவில்லை என்பது தான் அதற்கு காரணம். கட்டிலில் படுத்துக் கொண்டு, தன் கையை மடக்கி நெற்றியின் மேல் வைத்துக் கொண்டு, தன் தலைக்கு மேலே ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை பார்த்துக் கொண்டிருந்தான். காரணமே இல்லாமல் தினமும் அவனுக்கு ஃபோன் செய்து அவனிடம் பேசிக் கொண்டிருந்தவள், திடீரென்று அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டால், காரணமே இன்றி..!
அப்பொழுது அவனது கைபேசி, ஒரு குறுந்தகவலை சுமந்து வந்து குரல் கொடுத்தது. விருப்பமின்றி அதை எடுத்து, யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தான். அது இலக்கியாவிடமிருந்து வந்ததால், சட்டென்று எழுந்து அமர்ந்தான்.
"வாட்ஸ் அப்பை செக் செய்யவும்" என்று இருந்தது.
வாட்ஸாப்பை திறந்து பார்த்த அவன், அதில், ஒரு புகைப்படம் இருந்ததை பார்த்தான். அதில், இலக்கியா கட்டிலில் படித்திருக்க, அவளை சுற்றி பல குட்டீஸ் பட்டாளம் படுத்திருந்தார்கள். ஒரு சின்ன பெண் தன் காலை இலக்கியாவின் வயிற்றின் மீது போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். அதை பார்த்து புன்னகைத்தான் முகிலன்.
"உங்க வீட்ல வேற ரூம்ஸ் இல்லையா?" என்று ஒரு குறுந்தகவல் அனுப்பினான்.
"வெயிட்" என்று ஒரு பதில் அவளிடம் இருந்து வந்தது.
மெல்ல அந்த பிள்ளைகளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட இலக்கியா, குளியலறைக்கு வந்து கதவை தாளிட்டுக் கொண்டாள். அவளது பதிலுக்காக காத்திருந்த முகிலன், அவளது எண் தன் கைபேசியில் ஒளிர்வதை பார்த்தான். வழக்கம் போல் மூன்று மணி அடித்த பிறகு, அந்த அழைப்பை புன்னகையுடன் ஏற்றான்.
"ஹாய் முகி"
"ஹாய்"
"எல்லா ரூம்லயும் ஆளுங்க ஆக்குபை பண்ணிட்டாங்க. இந்த ஜந்துக்கள் எல்லாம் என்கிட்ட வந்து ஒட்டிக்கிச்சுங்க" என்று சிரித்தாள்.
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...