56 ஆட்டத்தின் திருப்புமுனை

1.2K 62 9
                                    


56 ஆட்டத்தின் திருப்புமுனை

தேனிசையின் நிலையை வார்த்தைகளால் வர்ணித்து விட முடியவில்லை. இப்பொழுது அவள், கிட்டத்தட்ட ஒரு பிணத்திற்கு சமம். தனது வாழ்க்கை இப்படி தலைகீழாய் மாறும் என்பதை அவள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அவளுக்கு பெற்றோர்கள் இருந்தார்கள், சகோதரன் இருந்தான்,  குடும்ப கௌரவம் இருந்தது, அனைத்தும் இருந்தது. ஆனால் இப்பொழுது? அவள் வெறும் பூஜ்ஜியம். சொத்து என்று சொல்லிக் கொள்வதற்கு சல்லி காசும் இல்லாத பூஜ்ஜியம்.

ஆதிரையிடம் வந்த முகிலன்,

"இதெல்லாம் உண்மையா மா?" என்றான் நம்ப முடியாமல்.

ஆமாம் என்று தலையசைத்தார் ஆதிரை.

"ஆமாம் சின்னு, அவ என் ஃபிரண்டோட பொண்ணு. புருஷன் இல்லாதவ. அவரை சின்ன வயசுலயே பறிகொடுத்தவ. எங்களுக்கு கல்யாணம் நடந்தப்போ, அவ தன்னுடைய கடைசி நாளை எண்ணிக்கிட்டு இருந்தா. அவளோட குழந்தையை எங்ககிட்ட கொடுத்து, ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்துல விட்டுட சொன்னா. ஆனா, எங்களுக்கு தான் அப்படி செய்ய மனசு வரல. உங்க அப்பா அவளை நம்மளே தத்தெடுத்துக்கலாம்னு சொன்னாரு.  அப்படியே செஞ்சோம். இந்த உண்மையை நாங்க உன்கிட்ட கூட சொல்லல. ஏன்னா, நீ அவளை உன் அக்காவா எத்துக்காம காயப்படுத்திடுவியோன்னு நாங்க பயந்தோம். ஆனா, இவ நம்ம எல்லாரையும் ஒரு சந்தர்ப்பம் கூட விடாம காயப்படுத்துவான்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல" என்றார் தேம்பியபடி.

"ஆமாம் சின்னு, நாங்களும் எங்களால முடிஞ்ச வரைக்கும் அவளை அனுசரிச்சு போக முயற்சி பண்ணி பார்த்துட்டோம். ஆனா அவ ரொம்ப கீழ்த்தரமா இறங்கி, எங்க பொறுமையை ரொம்பவே சோதிச்சிட்டா" என்றார் இளஞ்செழியன் தேனிசையை பார்த்தவாறு.

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு நின்றிருந்த திருக்குமரனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். தன் மனைவி உண்மையில் யார் என்பது அவனுக்கும் தெரிந்து போயிற்று. அவனைக் கண்ட அவர்களுக்கு சங்கடமாகி போனது. யாரிடமும் எதுவும் பேசாமலும், கேட்காமலும் அந்த இடம் விட்டு சென்றான் திருக்குமரன்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now