13 எண்ணச் சூழல்

1.3K 65 7
                                    

13 எண்ணச் சுழல்

தன்னை தானே சபித்துக்கொண்டான் முகிலன். என்ன வாழ்க்கை இது! நம்மிடம் இருந்து ஏதோ ஒன்று பறிக்கப்பட்டால் அதைவிட சிறந்த ஒன்று நமக்கு கிடைக்கும் என்று கூறுவதுண்டு. அதை நம்புவதா, வேண்டாமா என்று அவனுக்கு புரியவில்லை. அவன் திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தபோது, வாழ்க்கை அவனை ஏமாற்றி விளையாட்டு காட்டியது. இப்பொழுது அவன் அனைத்தையும் இழந்து நிற்கும் தருவாயில், ஒரு நல்ல பெண்ணை அவன் கண்களில் காட்டி, ஆசையை தூண்டிவிட்டு, மீண்டும் அதை பறித்துக் கொண்டது. அவன் மீதே அவனுக்கு வெறுப்பாய் இருந்தது.

அலுவலகம் செல்ல தயாராகி சிற்றுண்டி சாப்பிட தரைதளம் வந்தான் முகிலன். இளஞ்செழியனுக்கு சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த ஆதிரை, அவன் வருவதை கவனித்து, அவனுக்கும் பறிமாறினார். அவர் அவனிடம் பேசவும் இல்லை, எதுவும் கேட்கவும் இல்லை. அவர் வருத்தத்துடன் இருப்பது போல் காட்டிக் கொண்டார். அவனிடம் பேசச் சொல்லி இளஞ்செழியன் அவருக்கு கண்ணை காட்டிய போது கூட அவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.

"சின்னு, நான் சைட்டுக்கு போறேன். இன்னைக்கு மினிஸ்டர் வராரு. நீ யாரையாவது கிள்ளி கடைக்கு அனுப்பி, அங்கிருந்து ஸ்வீட்ஸை வாங்கிக்கோ" என்றார்.

"எதுக்குப்பா ஸ்வீட்ஸ்?" என்றான் அவன் குழப்பத்துடன்.

"நீ மறந்துட்டியா? இன்னைக்கு நம்ம கம்பெனி ஆரம்பிச்ச நாள். பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி இன்னைக்கு தான் நான் நம்ம கம்பெனியை ஆரம்பிச்சேன்."

ஆமாம். எப்படி அவன் இந்த நாளை மறந்தான்? ஒவ்வொரு வருடமும் அந்த நாளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதே அவன் தானே? அவன் தான் கிள்ளி கடைக்கு சென்று இனிப்பு வாங்குவதும் வழக்கம்.

"சின்னு..." என்ற இளஞ்செழியனின் குரல், அவனது எண்ணத்திலிருந்து அவனை வெளி கொண்டு வந்தது.

சரி என்று தலையசைத்தான்.

"மறந்துடாம யாரையாவது அனுப்பி ஸ்வீட்ஸை கொண்டு வந்துட சொல்லு. நான் லஞ்சுக்கு பிறகு ஆபீஸ் வந்துடுவேன்" என்றார் அவர்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now