17 முதலடி...

1.2K 62 9
                                    


17 முதலடி...

ஆதிரையின் எண், தன் கைபேசியில் ஒளிர்ந்ததை பார்த்த இளங்கோ, பதற்றமானான். இந்த இரவு நேரத்தில் எதற்காக அவர் தனக்கு ஃபோன் செய்கிறார் என்ற பரபரப்புடன் அந்த அழைப்பை ஏற்றான்.

"அம்மா, ஏதாவது சீரியஸான விஷயமா மா?" என்றான் அதே பதற்றத்துடன்.

"ஆமா, இளங்கோ, ரொம்ப சீரியசான விஷயம் தான்" என்றார் தன் சிரிப்பை அடக்கியபடி.

"என்னம்மா ஆச்சு? முகிலன் கல்யாணத்தை நிறுத்த ஏதாவது ஏடாகூடமா செஞ்சுட்டானா?"

"இல்ல... நம்ம சின்னு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்" என்றார் குதுகலமாய்.

ஒரு நிமிடம் இளங்கோவிற்கு ஒன்றுமே புரியவில்லை... தான் கேட்டது உண்மை தானா என்று அவனால் நம்ப முடியவில்லை.

"என்ன மா சொன்னீங்க?" மறுபடி சொல்லுங்க" என்றான்.

"உன்னோட ஃபிரண்டு, கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்னு சொன்னேன்"

"ஊ... ஹூ..." சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் இளங்கோ.

"நாளைக்கு காலையில நாங்க கிள்ளி அண்ணன் வீட்டுக்கு போய், இலக்கியாவை பொண்ணு கேட்க போறோம். நீயும் எங்க கூட வர"

"நிச்சயமா வரேன் மா. அதை விட வேற என்ன வேலை இருக்கு எனக்கு?" என்றான்.

"இப்போ நாங்க தாரணி குடும்பத்தை ரிசீவ் பண்ண ஏர்போர்ட்டுக்கு போறோம்"

"நீங்க அவங்களையும் பொண்ணு பாக்க வர சொல்லி இருக்கீங்களா?"

"இல்ல, நம்ம கபிலன் ஏதோ இன்டர்வியூவுக்காக சென்னைக்கு வரானாம். அவங்க அப்படியே அவன் கூட வந்து நம்மளை பார்க்கலாம்னு முடிவு பண்ணி டிக்கெட் எடுத்திருக்காங்க..."

"ஒரே கல்லுல இரண்டு மாங்கா அடிக்கப் போறாங்கன்னு சொல்லுங்க"

"ஆமாம்.." என்று சிரித்தார்.

"மாப்பிள்ளை என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு?"

"அவனோட ரூம்ல இருக்கான். தூங்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன்"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now