48 இலக்கியா பற்றிய உண்மை

1.2K 67 9
                                    


48 இலக்கியா பற்றிய உண்மை

அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருந்தாள் இலக்கியா. அவர்கள் நண்பர்கள் போல் ஒருவரை ஒருவர் காலை வாரிக் கொண்டு இருந்தார்கள். இது, அவள் முகிலனின் அறியாத பக்கம். அதைப் பற்றி ஏற்கனவே நலங்கிள்ளி பலமுறை கூறியிருந்தாலும், அவள் அதை நேரில் காண்பது இது தான் முதல் முறை.

மறுப்புறம், ஆதிரை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார், தன் மகன் மீண்டும் பழைய பரிணாமத்திற்கு திரும்பி விட்டதை எண்ணி...! இப்படித்தான் அவர் முகிலனை பார்க்க எண்ணினார். கலகலப்பான, பார்ப்பவர் மனதை கவரும் முகிலன்! அந்த பழைய முகிலனை வெளிக்கொண்டு வரத்தான் அவரும் பாடுபட்டார். ஆனால் அது இவ்வளவு விரைவாய் நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

மாமியாரும், மருமகளும் ஆச்சரியப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்களுக்கு என்ன தெரியும், தன் மனதில் இருக்கும் உணர்வுகளை எல்லாம் கொட்டி தீர்த்து விட, முகிலனை கூட இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக தான் காத்திருந்தான் என்று...! அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது, அதை நழுவ விடாமல், அவன் கெட்டியாய் பற்றி கொண்டு விட்டான்!

அப்பொழுது, பதற்றமே உருவாய்  இளஞ்செழியன் வருவதை அவர்கள் பார்த்தார்கள். அவரது பதற்றத்திற்கு காரணம், அங்கு நடந்தவற்றை ஆதிரை அவருக்கு ஃபோன் செய்து கூறிவிட்டிருந்தது தான். அதனால், அனைத்து வேலையையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு அவர் வீட்டிற்கு ஓடி வந்தார். ஆனால், வீட்டில் மற்ற மூவரும் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்த அவர் குழப்பத்துடன் நின்றார்.

"நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா?"

"ஆமாம். நான் பிரச்சனையை முடிச்சு வச்சுட்டேன்" என்றார் ஆதிரை பெருமையுடன்.

"என்னது? நீங்க முடிச்சீங்களா?" என்றான் முகிலன்.

"பின்ன, வேற யார் முடிச்சது?" என்றார் ஆதிரை.

"பிரச்சனையை முடிச்சது நான் தான். பிரச்சனையை உருவாக்குனது தான் நீங்க. நீங்க தான் என் பொண்டாட்டியை என்கிட்ட இருந்து பிரிச்சி, தனியா கொண்டு போய் வச்சீங்க. அவளை நான் தான் மறுபடி எங்க ரூமுக்கு கூட்டிக்கிட்டு போனேன்"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now