52 எதிர்பாராத முத்தம்

1.4K 62 6
                                    

52 எதிர்பாராத முத்தம்

இலக்கியாவின் தோலை சுற்றி வளைத்து அவளை வீட்டிற்குள் அழைத்து வந்த முகிலன், அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

"சீதாராமனை உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள் அவனது கண்களை சந்தித்தவாறு.

"அது என்ன பெரிய விஷயம்? அவன் உங்க ஸ்வீட் ஷாப்ல வேலை பார்த்தது தான் எல்லாருக்கும் தெரியுமே..." என்றான் தோள்களை குலுக்கி.

"ஆனா, அவன் வேலைக்கு சேர்ந்தது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி... அப்பா அவனை வேலையிலயிருந்து துரத்தினது, ஒரு வருஷத்துக்கு முன்னாடி..."

அவள் என்ன கூற வருகிறாள் என்று அவனுக்கு புரிந்தது. அந்த நேரம் அவன் சிறையில் இருந்தான். அதனால், அவர்களது கடைகள் நடந்த விஷயம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

"சொல்லுங்க, முகி... அவனைப் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?"

"வெண்ணிலா உனக்கு அனுப்புன போட்டோஸ் எதையும் நம்பாம, அதைப்பத்தி நீ இளங்கோ கிட்ட நம்ம கல்யாணத்தனைக்கு சொல்லி இருந்த"

"அதை பத்தி  இளங்கோ உங்ககிட்ட சொல்லிட்டாரா? நான் அவர்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தேனே..."

"அது எப்படி என்கிட்ட  சொல்லாம இருப்பான்? இது நம்ம எதிர்காலம் பத்தின விஷயம் ஆச்சே. அன்னைக்கு, உங்க குடும்பத்தை பத்தியும், கடையைப் பத்தியும், அது சம்பந்தப்பட்ட எல்லாரையும் பத்தியும் விசாரிக்க சொல்லி நான் அவன்கிட்ட சொன்னேன்"

"இதையெல்லாம் ஏன் விசாரிக்க சொன்னீங்க?"

"இந்த மாதிரியான நான்சென்ஸ்ஸை எல்லாம் அவாய்ட் பண்றதுக்கு தான். வெண்ணிலா அவ்வளவு கீழ்த்தரமா இறங்குனதை பார்த்த போது, அவ அதை அதோட விடமாட்டா, வேற ஏதாவது ஒரு டைரக்ஷன்ல இருந்து நமக்கு தொல்லை கொடுப்பான்னு நான் எதிர்பார்த்தேன். அதனால நீ சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு வச்சிக்கிறது நல்லதுன்னு எனக்கு தோணுச்சு. அப்போ தான் சீதாராமன் உங்க கடையில பண்ண கையாடலை பத்தியும் தெரிஞ்சுகிட்டேன்"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now