63 வருத்தம்

1K 52 6
                                    

63 வருத்தம்

தேனிசையின் நிலைமை கொஞ்சம் மோசம் என்பதால், அவளை காவலர்களின் அனுமதி பெற்று, அரசு மருத்துவமனையில் இருந்து, ஒரு புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றி இருந்தான் திருக்குமரன்.

இளஞ்செழியனும் முகிலனும் மருத்துவமனைக்கு செல்வதென்று தீர்மானித்தார்கள். இலக்கியாவும் அவர்களுடன் செல்ல வேண்டும் என்று எண்ணினாள்.

"நானும் உங்க கூட வரட்டுமா?" என்றாள்.

சரி என்று தலைசைத்தான் முகிலன்.

"தாராளமா நீ எங்க கூட வரலாம். நீயும் எங்க குடும்பத்துல ஒருத்தி தானே மா..." என்றார் இளஞ்செழியன்.

அவர்கள் மருத்துவமனைக்கு சென்றார்கள்.

மருத்துவமனை

அவசர சிகிச்சை பிரிவின் வெளியில் சுவற்றில் சாய்ந்து கண்களின் மூடியபடி நின்றிருந்தான் திருக்குமரன். இளஞ்செழியன் அவன் தோளை தொட, அவன் கண் திறந்தான். தனது முன்னாள் மாமனார், தன் முன்னால் நின்றிருந்ததை பார்த்து அவன் மலைத்தான்.

"தேன் எப்படி இருக்கா?" என்றார் இளஞ்செழியன் வறண்ட குரலில்.

"உயிரோட தான் இருக்கா... உயிரோட மட்டும் தான் இருக்கா... அதுக்கு மேல எதுவும் இல்ல" என்றான் கலங்கிய கண்களுடன்.

"நாங்க அவளை பார்க்கலாமா?"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. உங்களைப் பார்த்தா அவ என்ன நினைப்பான்னு புரியல" என்று தலை தாழ்த்தினான் தயக்கத்துடன்

"அப்பா, முதல்ல நீங்க போய் அவங்கள பாருங்க. நாங்க வெளியிலேயே இருக்கோம்" என்றாள் இலக்கியா.

இளஞ்செழியன் முகிலனை பார்க்க, அவனும் நீங்கள் சென்று வாருங்கள் என்று தலை அசைத்தான். அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்

"ஒரு நிமிஷம் மா..." என்று மாமா என்ற வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினான் திருக்குமரன். அவனுக்காக வருத்தப்பட்டார் இளஞ்செழியன்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now