39 விதியின் விளையாட்டு

1.2K 66 7
                                    

39 விதியின் விளையாட்டு

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து கண்விழித்த முகிலன், எழுந்தமர்ந்து, இலக்கியா இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். அவனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை எண்ணிய அவனது இதழ்களில் புன்னகை குடி கொண்டது. அவள் இனிமையான பெண். அவளது செயல்பாடுகளும் மனதிற்கு இனிமை தரக்கூடியதாகவே இருக்கிறது. அவனுடைய பிறந்தநாள், அவனுக்கே நினைவில் இல்லாத போது, அவளுக்கு எப்படி தெரிந்தது...!

அவனது பிறந்த நாளை கொண்டாடுவது பற்றி அவள் அவனிடம் பேசி இருக்கிறாள். ஆனால் இவனோ, ஏதேதோ கற்பனை செய்து கொண்டு விட்டான், என்று எண்ணி தன் தலையை இடவலமாக அசைத்து சிரித்தான். அவள் கூறியதில் இருந்த பொருளின் ஆழத்தை அவன் உணர தவறி விட்டான். ஒரு தோழியாய் நான் உங்கள் தூக்கத்தை கெடுக்கலாமா என்று தானே அவள் கேட்டாள்? அவன், அவளை தன் தோழியாகவே பாவிக்காத போது, அவன் அதைப் பற்றி எப்படி சிந்திக்க முடியும்?

குளித்து முடித்து தரைதளம் வந்த முகிலன், அனைவரும் உணவு மேஜையில் கூடியிருந்ததை பார்த்தான். அவர்கள் எதைப் பற்றியோ மிகவும் தீவிரமாய்உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால், நேற்று இரவு அவன் வெட்டியது போக மீதம் இருந்த சாக்லேட் கிரீம் கேக் இருந்தது. அவர்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவனுக்கு புரிந்தது.

"தண்டபாணி" என்று வேலைக்காரனை அழைத்தான் முகிலன்.

"சொல்லுங்க தம்பி" என்று அவர் ஓடி வந்தார்.

"எனக்கு கொஞ்சம் காபி கொடுங்க" என்றவுடன்,

"சரிங்க தம்பி" என்று அவர் உள்ளே சென்றார்.

"சின்னு, உனக்கு இந்த கேக்கை பத்தி ஏதாவது தெரியுமா?" என்றார் ஆதிரை.

"நான் இது பிரிட்ஜில இருந்ததை பார்த்தேன்" என்றார் தாரணி.

அவனுக்கு தெரியும், அவர்கள் வேண்டுமென்றே தான் அவனிடம் அதைப் பற்றி கேட்கிறார்கள் என்று. ஏனென்றால் அந்த கேக்கின் மீது *ஹாப்பி பர்த்டே ஹப்பி* என்று எழுதியிருந்தது.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now