19 மனதிற்கு பிடித்தவர்

1.1K 61 5
                                    

19 மனதிற்கு பிடித்தவர்

முகிலன் இல்லம்

அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

"இன்னைக்கு சாயங்காலம் பரணன் எனக்கு ஃபோன் பண்ணான். அவன் நாளன்னைக்கு இந்தியா வரானாம்"என்றார் தாரணி.

"அவன் கல்யாணத்துக்கு முன்னாடியே வர்றது ரொம்ப நல்லதா போச்சு" என்றார் இளஞ்செழியன்.

"ஆமாம், அவனும் மேரேஜ் பிரிப்பரேஷன்ல நமக்கு ஹெல்ப் பண்ணுவான்" என்றான் கபிலன்

"இலக்கியாவுக்கு கல்யாணத்துக்கு தேவையான டிரஸையெல்லாம் நாம தான் தைச்சு கொடுக்கணும்" என்றார் ஆதிரை.

இலக்கியாவின் பெயரைக் கேட்டவுடன் தலையை நிமிர்த்தினான் முகிலன்.

"நம்மள்ல யாராவது ஒருத்தர் அவளை கடைக்கு கூட்டிட்டு போய் ட்ரெஸுக்கு அளவு கொடுத்துட்டு வரணும்" என்றார் ஆதிரை

"தாரணி அதை செய்வா" என்றார் அவரது கணவன் திருமேனி.

"இல்ல, இல்ல, எனக்கு நாளைக்கு எக்கச்சக்க வேலை இருக்கு. நாளைக்கு தேன்மொழி வீட்டுக்கு போய் அவங்க குடும்பத்தாரை கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணணுமே" என்றார் தாரணி.

"ஆமாம், அதுவும் முக்கியமான வேலை தான். அப்போ நாளான்னைக்கு போயிட்டு வாங்க" என்றார் திருமேனி.

"தள்ளி போடறதுக்கு நமக்கு டைம் இல்லயே" என்றார் ஆதிரை கவலையுடன்.

"நான் வேணும்னா அவங்களை கடைக்கு கூட்டிட்டு போயி அளவு கொடுத்துட்டு வரேன்" என்றான் கபிலன்.

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து முகம் சுருக்கினான் முகிலன்.

"இது நல்ல ஐடியா" என்றார் ஆதிரை.

"நான் கிள்ளிக்கு ஃபோன் பண்ணி, கபிலன் வர்ற விஷயத்தை சொல்லிடறேன்" என்றார் இளஞ்செழியன்.

"அந்தக் கடை எங்க இருக்கு?" என்றான் கபிலன்.

"நம்ம ஆபீஸ் இருக்கிற தெருவுக்கு அடுத்த தெருவில் இருக்கு"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now