46 விளைவு

1.3K 62 12
                                    


46 விளைவு

முகிலனை கண்காணிக்க வெண்ணிலாவால் நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒருவன் அவளுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்றாள் வெண்ணிலா.

"என்ன ஆச்சு?"

"முகிலன் வீட்டுக்கு வந்துட்டான்"

"அதனால?"

"ஆஃபீஸ்ல அவனுக்கு இன்னைக்கு சாயங்காலம் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது. அதை கேன்சல் பண்ணிட்டு அவன் வந்திருக்கான்"

வெண்ணிலாவின் முகத்தில் வெற்றி புன்னகை மலர்ந்தது. அவளது திட்டம் பலித்து விட்டதாய் எண்ணினாள் அவள்.

"இலக்கியா எங்க? அவ முகிலன் வீட்டில் இருந்து கிளம்பி போயிட்டாளா?" என்றாள் ஆர்வத்துடன்.

"இல்ல. அவ இன்னும் அந்த வீட்டை விட்டு போகல"

"நீ என்ன சொல்ற?"

"அவ இன்னும் முகிலன் வீட்ல தான் இருக்கா"

"நிஜமா தான் சொல்றியா?" என்றாள் தடிமனான குரலில்

"ஆமாம். அவ இன்னும் வீட்டை விட்டு வெளியே வரவே இல்ல"

"சரி"எரிச்சலுடன் அழைப்பை துண்டித்தாள் வெண்ணிலா.

"என்ன ஆச்சு?" என்றார் மதிவாணன்.

"இலக்கியா இன்னும் முகிலன் வீட்டை விட்டுவிட்டு போகவே இல்லையாம்" என்றாள் கோபத்துடன்.

"நீ அனுப்புன ஆடியோவை கேட்டா, அவ நிச்சயம் அங்க இருக்க மாட்டா"

"அவ ஏற்கனவே அதை கேட்டுட்டா. நான் அவ வாட்ஸப்ல ப்ளூ டிக்கை பார்த்தேன். அவ அதைக் கேட்டு ரொம்ப நேரம் ஆச்சு" என்றாள் திடமாய்.

"ஆதிரை அங்க தான் இருக்காளா?"

"ஆமாம்... அவ வேற எங்க போவா?" என்றாள் வெண்ணிலா கடுப்புடன்.

"அப்படின்னா முகிலனும் இலக்கியாவும் பிரியிறது சந்தேகம் தான். அந்த பொம்பள அங்க இருக்கிற வரைக்கும், அவ பிள்ளையை விட்டு இலக்கியாவை போக விடவே மாட்டா. அவ பிள்ளையோட வாழ்க்கை கெட்டு போறத அந்த பொம்பள பாத்துகிட்டு சும்மா இருப்பானு நினைச்சியா நீ? எப்படியாவது, ஏதாவது செஞ்சு அவ அந்த பொண்ணை சமாதானப்படுத்த தான் பாப்பா"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now