64 மன்னிப்பு

1K 53 11
                                    

64 மன்னிப்பு

மறுநாள் அரசு மருத்துவமனைக்குச் செல்ல தயாரானான் முகிலன்.

"இலக்கியா, நான் ஹாஸ்பிடல்ல இருந்து அப்படியே ஆஃபீசுக்கு போயிடுவேன். நீ வெண்ணிலாவை பத்தி அம்மா கிட்ட சொல்லிடு" என்றான் முகிலன்.

"சரி..."

"நான் கான்பரன்ஸை முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடுறேன். அதுவரைக்கும் நீ அம்மா கூட இரு. அவங்களை தனியா விடாத. அவங்க ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்காங்க"

"நான் அவங்களை பார்த்துக்கிறேன்"

முகிலன் வீட்டை விட்டு கிளம்பினான். ஆதிரையின் அறையை நோக்கி நடந்தாள் இலக்கியா. அப்பொழுது அவளை நோக்கி இளஞ்செழியன் வருவதை பார்த்தாள்.

"நான் உனக்காக தான் மா வெயிட் பண்றேன்"

"சொல்லுங்க பா"

"நீ கொஞ்சம் அம்மா கூட இரு டா. அவளை தனியா விடாதே"

"நான் பாத்துக்குறேன் பா. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க"

"சின்னு ஆபீசுக்கு கிளம்பிட்டானா?"

"இப்ப தான் பா கிளம்பினாரு"

"நானும் சைட்டை போய் பார்க்க வேண்டியிருக்கு. அது ரொம்ப முக்கியம். இல்லனா நான் போக மாட்டேன்"

"பரவாயில்ல பா. நான் தான் இங்கே இருக்கேனே"

"சரி டா மா. நான் கிளம்புறேன்"

"சரிங்க பா"

ஆதிரையின் அறைக்கு  சென்ற இலக்கியா, அவர் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்தாள். அவரது கண்கள் மூடி இருந்தது. ஆனால் அவர் உறங்கவில்லை. அவரிடம் சென்று பக்கத்தில் அமர்ந்தாள் இலக்கியா. அவள் வந்ததை உணர்ந்த ஆதிரை, கண் விழித்தார். அவளைப் பார்த்து வலிய சிரித்தார்.

"பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டீங்களா மா?"

"இன்னும் இல்ல டா"

"ஏன் மா?"

"பசிக்கல"

"உங்களுக்கு பசிக்காது" என்று கூறிய அவளை வியப்புடன் பார்த்தார் ஆதிரை.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now