42 விபத்தல்ல...!

1.2K 61 6
                                    

42 விபத்தல்ல...!

தன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்த இலக்கியாவை, மெல்லிய புன்னகையுடன் அன்பான பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் முகிலன்.

"உங்களுக்கு ஒன்னும் இல்லல?" என்றாள் அவள் கவலையுடன்.

இல்லை என்று தலையசைத்த முகிலன்,

"நீ என்னை பத்தி கவலைப்படாதே" என்றான்.

அதற்கு அவள் பதில் ஏதும் கூறவில்லை. அவளது அமைதிக்கு அர்த்தம், *நான் நிச்சயம் உன்னை பற்றி கவலைப்படுவேன்* என்பது தான் என்று அவனுக்கு புரிந்தது. அவனது மணி பர்ஸை அவனிடம் திரும்ப கொடுத்தாள் இலக்கியா. அதை அவளிடம் இருந்து பெற்று, தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். தனது கைபேசியை எடுத்து இளங்கோவுக்கு ஃபோன் செய்த முகிலன், நடந்த விபத்தை பற்றி அவனிடம் கூறினான்.

"இப்போ நீ எங்க இருக்க?"

"கோவிலுக்கு எதிரில் இருக்கிற காபி ஷாப் பக்கத்துல நிக்கிறேன்"

"நான் கிளம்பி வரேன்" என்று கூறியபடி நடக்க துவங்கினான் இளங்கோ, அழைப்பை துண்டிப்பதற்கு முன்பாகவே.

"இளங்கோ வர்ற வரைக்கும் அந்த காபி ஷாப்ல இருக்கலாம்" என்றான் முகிலன் இலக்கியாவிடம்.

அவள் தலையசைத்து விட்டு அவனை பின்தொடர்ந்தாள். அவர்கள் காபி சாப்பிட்ட அதே மேசைக்கு மீண்டும் வந்தார்கள். அவர்களுக்கு காப்பி கொடுத்த அதே ஊழியர் அவர்களை நோக்கி ஓடி வந்தார். அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் தெரியும், அங்கு நடந்தது என்ன என்று.

வழக்கமாய் காப்பச்சீனோவை ஆர்டர் செய்யும் அவன், இந்த முறை வேண்டுமென்றே

"காஃபி மோச்சா" என்று வேறொரு காபி வகையை ஆர்டர் செய்தான்.

ஆனால் இலக்கியா மறுப்பு ஒன்றும் கூறாமல் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள். பயமும் பதற்றமும் அவளை ஆட்கொண்டுள்ளது என்று அவனுக்கு புரிந்தது.

"இலக்கியா..." என்று மெல்ல அவள் பெயர் சொல்லி அழைத்தான்.

தன் தலையை உயர்த்தி அவனை பார்த்த அவள், மீண்டும் தலை குனிந்து கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றதை அவன் பார்த்தான்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now