11 இலக்கியாவின் பதில்

1.1K 56 5
                                    

11 இலக்கியாவின் பதில்.

ஒரு எழுத்து விடாமல் அந்த கோப்பில் இருந்த அனைத்து வாசகங்களையும் படித்து முடித்தான் முகிலன். தனது கைபேசியை பக்கத்தில் வைத்துவிட்டு பெருமூச்செறிந்தான். கரும்புள்ளியே இல்லாத சுத்தமான வெள்ளை தாளை போல் இருந்தது இலக்கியாவின் வாழ்க்கை. அவள் அவ்வளவு நல்லவளா? அப்படிப்பட்ட நல்ல பெண்ணை அடையும் தகுதி அவனுக்கு இருக்கிறதா? இவனோ குற்றத்தின் உறைவிடம்... ஆனால் அவளோ, குற்றமற்ற சொக்கத்தங்கம். இவன் எப்படி அந்த பெண்ணுக்கு பொருத்தமாய் இருப்பான்? வாழ்க்கை ஒன்றும் விளையாட்டல்லவே...! திருமணத்திற்கு பிறகு அவனுடன் வாழ்நாள் எல்லாம் இருக்க போகிறவள்...! ஒருவேளை எதிர்காலத்தில் அவள் வித்தியாசமாய் யோசித்தால் என்ன செய்வது? அவளுடைய குணம் மாறினால் என்ன செய்வது?  அவனுடைய குற்றங்களை பார்க்க துவங்கினால் என்ன செய்வது?  முடிவெடுக்க முடியாமல் தவித்தான்.

ஆனால் அதே நேரம், இப்படிப்பட்ட புரிதல் உடைய பெண்ணான அவள் அவனுக்கு பொருந்தாவிட்டால் வேறு யார் பொருந்துவார்? இந்த சிறிய வயதிலேயே இவ்வளவு நுண்ணறிவுடன் யோசிக்கும் அவள், எதிர்காலத்தில் இன்னும் பல அனுபவங்களை பெற்ற பிறகு, அவனைப் பற்றி தவறாகவா நினைக்க போகிறாள்? என்றும் அவனுக்கு தோன்றியது. இலக்கியாவை பற்றிய எண்ணத்தில் முகிலனின் தலை சுற்றியது.

எங்கள் கூடு

இரவு உணவை முடித்துக் கொண்டு தனது அறைக்கு சென்றார் நற்கிள்ளி. அவர் சிறிதும் எதிர்பாராத வண்ணம்,

"ஏன் நம்ம இலக்கியாவோட கல்யாணத்தைப் பத்தி எதுவும் பேசாம இருக்கீங்க? இன்னும் முகிலன் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லலையா?" என்று சரியாக ஊகித்து கேள்வி எழுப்பினார் பொன்மொழி.

சரியாக அதே நேரம், சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுப்பதற்காக அவர்களது அறையை கடந்தாள் இலக்கியா. அவளுடைய அம்மா கேட்ட கேள்வி, அவளையும் பிரமிக்க செய்தது. அதனால் அப்படியே நின்றாள்.

"அங்க இன்னைக்கு ஒரு பெரிய ரகலையே நடந்தது" என்றார் நற்கிள்ளி

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now