57 கூட்டு களவாணிகள்
தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்புமாறு கூறினான் திருக்குமரன். அவனது கட்டளைக்கு கீழ்ப்படிந்த தேனிசை, தனது உடைமைகளை பைகளில் எடுத்து வைக்க துவங்கினாள்.
அப்பொழுது, முகிலன் இல்லம் சட்டென்று பரபரப்பாகி போனது, தாரணியின் குடும்பம் திரும்ப வந்ததால். அவர்களைப் பார்த்ததும் புத்துயிர் பெற்றார் ஆதிரை.
"ஹாய் பெரியம்மா" என்றான் கபிலன்.
"என்னக்கா, எப்படி இருக்க?" என்றார் தாரணி.
"நல்லா இருக்கேன்" என்ற அவரது பதிலில் உயிர்ப்பு இல்லாமல் இருந்ததை கவனித்தார் தாரணி.
அப்பொழுது அவர்கள், திருக்குமரனும் தேனிசையும், உறங்கிக் கொண்டிருந்த மலர்விழி, மற்றும் சூடர்விழியை தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டு வருவதை அவர்கள் பார்த்தார்கள்.
"ஹாய் மாமா" என்றான் கபிலன் திருக்குமரனை பார்த்து.
அவன் லேசாய் தலையசைத்தான்.
"எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?" என்றார் தாரணி
"நல்லா இருக்கேன்"
" நீங்க எப்போ வந்தீங்க? இப்போ எங்க கிளம்புறீங்க? " என்றான் கபிலன்.
"நேத்து சாயங்காலம் வந்தோம். இப்போ வீட்டுக்கு கிளம்பறோம்" என்றான் திருக்குமரன்.
"ஏன் மாப்பிளை இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டீங்க? இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாமே?" என்றார் திருமேனி.
"இல்ல மாமா, நாங்க கிளம்பணும்"
அவனிடம் தெரிந்த வித்தியாசத்தை கவனிக்க தவறவில்லை அவர்கள். சிவந்திருந்த தேனிசையின் முகத்தையும், அமைதியாய் நின்றிருந்த ஆதிரையையும் பார்த்து, ஏதோ தவறாய் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டார் தாரணி. அதனால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் நின்றார்.
"நாங்க போயிட்டு வரோம்" என்று தன் குடும்பத்தாருடன் அங்கிருந்து சென்றான் திருக்குமரன்.
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...