33 முகிலனின் மறுப்பு

1.3K 50 5
                                    

33 முகிலனின் மறுப்பு

கையில் ஒரு தட்டுடன், தன் அறைக்கு வந்தாள் இலக்கியா. அதில் விதவிதமான இனிப்பு வகைகள் இருந்தன. அதை பார்த்த முகிலன் சிரித்தான்... அவனது மாமனார் ஒரு இனிப்பகத்தின் சொந்தக்காரர் ஆயிற்றே...!

அந்தத் தட்டை அவனை நோக்கி நீட்டிய இலக்கியா,

"எடுத்துக்கோங்க சின்னையா" என்றாள்.

அவளிடம் இருந்து அந்த தட்டை பெற்று, சாப்பிடாமல் அதை பக்கத்தில் வைத்தான்.

"நீங்க எதுவும் சாப்பிடலையா?" என்றாள் இலக்கியா.

"அப்புறமா சாப்பிடுறேன்"

"சரி"

"நீ சாப்பிட மாட்டியா?"

"எனக்கு ஸ்வீட் சாப்பிட்டு அலுத்து போச்சு"

"அப்படின்னா, இதெல்லாம் எனக்கு மட்டுமா?" என்றான் அவன் நம்ப முடியாமல்.

"ஆமாம்" என்று சிரித்தாள் அவள்.

"என்னை சர்க்கரை நோயாளி ஆக்கணும்னு முடிவோட இருக்கீங்களா?" என்று முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கேட்டான்.

"ஒருநாள் சாப்பிட்டா ஒன்னும் உங்களுக்கு சர்க்கரை நோய் வந்துடாது"

"இன்னைக்கு ஒரு நாளோட எனக்கு ஸ்வீட் கொடுக்கிறத நீ நிறுத்திடுவியா?"

"அது கஷ்டம் தான். ஆனா தினமும் கொடுக்கிறதும் நடக்காது இல்ல...? இன்னைக்கு தானே நீங்க எங்க அப்பா வீட்டுக்கு வந்து இருக்கீங்க?"

அதிலிருந்த ஒரு நெய் மைசூர்பாகை எடுத்து, அதை முகிலனின் வாயருகே நீட்டினாள் அவள். அதை அவள் கையில் இருந்து பெற்று, அதை சாப்பிட்டான் அவன். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இலக்கியா. ஏனென்றால் அது அவள் எதிர்பார்த்தது தான்.

அவள் முகத்தில் ஏமாற்றம் தெரியாததை கண்டு அவன் அதிசயபட்டான்.

"நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், இலக்கியா" என்று நல்ல விஷயத்தை ஆரம்பித்தான்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Onde histórias criam vida. Descubra agora