50 இலக்கியாவின் காதல் கதை
முகிலன் குடும்பத்தாருடன் சிற்றுண்டி உண்டார் ஜமால். ஆதிரை தான் அவருக்கு பரிமாறினார். முகிலனுடனும் ஜமாலுடனும் இணைந்து சாப்பிடச் சொல்லி, அவர் இலக்கியாவை அமர வைத்தார்.
"உங்க சிஸ்டரை ஒரு நாள் எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வாங்க சார்" என்றான் முகிலன்.
சரி என்று தலைசைத்தார் ஜமால்.
"அவங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய விஷயத்தை நான் தெரிஞ்சுக்கலாம் போலருக்கு..." என்றான் இலக்கியாவை பார்த்தபடி.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அவள் அவனைப் பார்க்க, அவளை பார்த்து அவன் கிண்டலாய் புன்னகைத்தான். உதடு சுழித்து தலை குனிந்து கொண்டாள் அவள், அது அவனது புன்னகையை விரிவடைய செய்தது.
அவர்களிடமிருந்து விடை பெற்றார் ஜமால். முகிலனும், ஆதிரையும் அவரை வழி அனுப்பினார்கள். அங்கிருந்து தங்கள் அறைக்கு ஓடிப் போனாள் இலக்கியா. அவளுக்கு தெரியும், அவள் அங்கிருந்தால், முகிலன் ஆதிரையுடன் இணைந்து அவளை வைத்து செய்து விடுவான் என்று. இலக்கியாவை காணாமல் இங்கும் அங்கும் தேடிய முகிலன்,
"அம்மா, இலக்கியா எங்க?" என்றான்.
"இங்க தானே இருந்தா..."
"நான் போய் பாக்குறேன்" என்றுதங்கள் அறைக்குச் சென்றான்.
தங்கள் அறைக்கு வந்த முகிலன், இலக்கியா அலமாரியில் எதையோ தேடுவதை பார்த்தான். அவள் எதையும் தேடவில்லை, தேடுவது போல் பாசாங்கு செய்தாள். அவளை நோக்கி முன்னேறினான் முகிலன். அவன், அவள் அருகில் வந்த போது, அங்கிருந்து நழுவி செல்ல முயன்றாள் இலக்கியா. அவள் வழியை மறித்த அவன்,
"நகராதே..." என்றான்.
அலமாரியில் சாய்ந்து தன் நகத்தை கடித்தபடி நின்றாள் இலக்கியா. மெல்ல தன் இமையை உயர்த்தி அவனை பார்த்தாள். அவன் தன் கைகளைக் கட்டிக் கொண்டு அவளுக்கு முன்னால் நின்றான்.
"அப்படின்னா, நீ என்னை நாலு வருஷமா காதலிக்கிற..."
அவள் இல்லை என்று தலையசைத்தாள். வியப்போடு தன் புருவம் உயர்த்தினான் முகிலன். அவள் பொய் கூறுகிறாளா?
YOU ARE READING
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
Romanceஉலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்...