7 கூச்சல்

1.2K 61 6
                                    

7 கூச்சல்

இளங்கோவுக்கு ஃபோன் செய்து அவனிடம் விஷயத்தை கூறினார் ஆதிரை. திருமணத்தை தடுத்து நிறுத்த, கிள்ளியின் வீட்டிற்கு முகிலன் சென்றிருக்கிறான் என்று கேட்ட இளங்கோ, பதற்றமானான். ஆதிரையிடம் பேசியவாறு, தனது இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு நடந்தான்.

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு, இளங்கோ. இவன் அங்க போயி, எனக்கு கல்யாணத்துல சுத்தமா விருப்பமே இல்லன்னு சொல்லிட்டா, நம்மால எதுவுமே செய்ய முடியாது" என்றார் கவலையாக.

"நீங்க கவலை படாதீங்க மா, நான் அவங்க வீட்டுக்கு போய், அவன் அப்படி எதுவும் செய்யாம பார்த்துக்கிறேன்" என்று நம்பிக்கை அளித்தான்.

"ரொம்ப தேங்க்ஸ், இளங்கோ"

"இது என் கடமை மா" என்று அழைப்பை துண்டித்து விட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து, அதை உதைத்து கிளப்பினான்.

எங்கள் கூடு

கிள்ளியின் வீட்டிற்கு வந்த முகிலன், காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு, காரை விட்டு கீழே இறங்கி உள்ளே நடந்தான், தனக்கு முன்னாள் வைக்கப்பட்டிருக்கும் பிரச்சனையை ஒரேடியாய் முடிவுக்கு கொண்டு வர.

அவனது கால்களின் வேகம் குறைந்தது, உள்ளிருந்து வந்த கூச்சலை கேட்டு. ஆம், அந்த கூச்சலின் தலைப்பே *அவன்* தான். கிள்ளியின் குடும்பத்தினர், அவனைப் பற்றியும், அந்த திருமணம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். கிள்ளியின் குடும்பத்தாருக்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை என்று அவனுக்கு தெளிவாக புரிந்து போனது. அப்படி என்றால், இந்த திருமணத்தை நிறுத்த, அவன் எந்த பிரயத்தனமும் செய்ய வேண்டியதில்லை. கிள்ளியின் குடும்பத்தினரே அதை செய்து விடுவார்கள் என்று எண்ணினான் அவன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று தெரிந்தே தான் இருந்தது இலக்கியாவுக்கு. தன் மனதில் இருப்பதை அவர்களிடம் கூறி, அவர்களது பதற்றத்தை குறைக்க வேண்டியது தன் கடமை என்று கருதினாள் அவள். தன் முடிவு குறித்த விளக்கத்தை தன் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் அவள் கொடுத்து தான் தீர வேண்டும் என்று அவளுக்கு தெரியும். அவர்கள் அவளது வாழ்வின் அங்கங்கள் ஆயிற்றே...!

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now