36 காரியம்... காரணம்...

1.3K 60 7
                                    

36 காரியம்... காரணம்...

தங்கள் மகள் பற்றி இலக்கியா பேசிய நினைப்பிலிருந்து வெளியே வர இயலவில்லை முகிலனால். சோபாவில் அமர்ந்து அதைப்பற்றி யோசித்தான் அவன். அவர்களுக்கு பிறக்கப் போகும் மகள் கூட இலக்கியாவை போல் தான் இருப்பாளோ? என்று எண்ணிய பொழுது அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. அம்மாவும் மகளும் இணைந்து, வாழ்நாள் முழுக்க அவனுக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் அளித்துக் கொண்டே இருந்தால், அவன் என்ன செய்வது? என்று யோசித்து சிரித்தான். அவன் எண்ணம் அவனுக்கே ஆச்சரியம் அளித்தது. அவனும் கூட இலக்கியாவை போல் மாறிவிட்டானோ என்று தோன்றியது அவனுக்கு.

முதல் நாள், அவள் முகம் சோகமாய் மாறியதை எண்ணினான். நல்ல வேலை, அவள் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. தானாகவே சமாதானம் ஆகிவிட்டாள். அவள் கையால் அவன் இனிப்பு சாப்பிட மறுத்த பிறகு, அவள் சோகமே வடிவமாய் காட்சியளித்தாள். அவனும் தான் என்ன செய்வான்? அவன் அதற்கெல்லாம் பழக்கப்பட்டவன் இல்லையே...!

காபி குடிப்பதற்காக காத்திருந்தான். இலக்கியா தனக்கு காப்பி கொண்டு வந்து தருவாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் வரவில்லை. அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாளோ...! அவளுக்காக காத்திருப்பதை விட, தரைதளம் சென்று காபியை பருகிக் கொள்ளலாம் என்று எண்ணி தரைதளம் வந்தான். அப்பொழுது, அவன் இலக்கியா பூஜை அறையில் இருந்து அவனது அம்மாவுடன் வெளியே வருவதைப் பார்த்தான்.

அவன் அம்மாவுடன் இணைந்து அவள் பூஜை செய்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. இலக்கியாவின் நெற்றியில் குங்குமம் வைத்து விட்ட ஆதிரை, ஒரு லட்டுவை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டார். மற்றொரு லட்டுவை எடுத்து அவளிடம் கொடுத்து,

"இதை சின்னுகிட்ட கொடுத்துடு" என்றார்.

அதை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, சரி என்று தலையசைத்தாள் இலக்கியா.  அதை பார்த்த முகிலனின் மூளை துரிதமாய் வேலை செய்தது. அவள் தன்னை பார்க்கும் முன் தன்னறைக்கு ஓடினான். இடுப்பில் கை வைத்து கொண்டு, என்ன செய்வது என்று, நெற்றியை தேய்த்து  சில நொடி யோசித்த அவனுக்கு, ஒரு யோசனை தோன்றியது. பால்கனிக்குச் சென்று, அங்கிருந்த ஒரு பூத்தொட்டியை எடுத்து, அதிலிருந்து மண்ணை அள்ளினான்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now