2 பசுத்தோல் போர்த்திய...

1.6K 65 4
                                    

2 பசுத்தோல் போர்த்திய...

இளஞ்செழியனின் வியாபார கூட்டாளி மதிவாணன். முகிலனை தனது மருமகனாக அடைய வேண்டும் என்பது மதிவாணனின் தீராத விருப்பம். அவரது மூத்த மகள் வெண்பா, தன்னை உத்தமியாக காட்டிக் கொண்டு, உலகத்திலுள்ள அத்தனை அட்டூழியங்களையும் செய்தவள். அதை தன் புடவை தலைப்பால் மூடி மறைத்தவள். அவளுக்கு முகிலனை மணந்து கொள்வதில் சிறிதும் விருப்பமில்லை. அவள் காதலித்தது முகிலனின் பரம எதிரியான தமிழ்மாறனை. அவர்களது திருமண பேச்சு தமிழ்மாறனின் காதுகளுக்கு சென்றது. முகிலனுடனான திருமணத்திற்கு, வெண்பாவை  சம்மதிக்க சொல்லி வற்புறுத்தியது தமிழ்மாறன் தான். ஏனென்றால், முகிலனை வீழ்த்த வெண்பாவை ஒரு பிரம்மாஸ்திரமாக பயன்படுத்த நினைத்தான் தமிழ்மாறன். முகிலனுக்கும் வெண்பாவுக்கும் திருமணம் ஆனபின், வெண்பாவுடன் அவன் ஊரை விட்டு ஓடினால் முகிலனின் கௌரவம் நினைகுலையும் அல்லவா? தன் மனைவி தன்னை விட்டுப் போன துயரத்தில் முகிலன் மடிவான் என்பது தான் அவனுடைய கணிப்பு. அவனது திட்டத்திற்கு வெண்பாவும் சம்மதித்தாள்.

அதே நேரம், வெண்பா முகிலனிடம் நெருங்க கூடாது என்று அவன் திட்டவட்டமாய் கூறி வைத்தான். அதற்கு ஏற்றார் போல், ஒரு திட்டம் தீட்டினாள் வெண்பா. தன் அப்பா மதிவாணனின் நீண்ட ஆயுளுக்காக அவள் விரதம் ஏற்றிருப்பதாய் மதிவாணனை நம்ப வைத்தாள். அது மதிவாணனை நெகிழச் செய்தது. முகிலனின் அப்பாவான இளஞ்செழியனும், தனக்கு வரப்போகும் மருமகளை எண்ணி பூரித்துப் போனார், அவள் பசுத்தோல் போர்த்திய புலி என்ற உண்மையை அறியாமல். 

அப்போது, தனது வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வந்த முகிலன், தன் திருமணத்தைப் பற்றி எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்தான். அவனுடைய பெற்றோர் வெண்பாவை அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய போது, அவன் அதற்கு ஒப்புக்கொண்டான். ஏனென்றால் மதிவாணன் அவர்களது வியாபாரக் கூட்டாளி. தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் மும்முரத்தில் இருந்த அவன், மதிவாணனின் ஆதரவை இழக்க விரும்பவில்லை.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now