மீண்டும் உங்களோடு நான் சிறிதாய் ஒரு பயணம்....
Episode.....01
சூரியன் அடிவானில் தஞ்சம் கொள்ளும்போது...
இருள் மெல்ல பூமியை அணைக்கின்றது...சில்லென ஓடும் நதியோரம்
ஒரு பாறை மீது...ஒருவன் தன்னை மறந்து புல்லாங்குழல் மீட்டியவாறு இருந்தான்....
ஏனோ...
அவனுக்கு அந்த தனிமைதான்
உறவுபோல் ரொம்ப ரசித்திருந்தான்....வயது
ஒரு இருபத்தி ஐந்து போல் இருக்கும்
சுருண்டிருந்த கருப்பு நிற கேசமும் கருணை நிறைந்த இரு விழிகளும் அவனை பார்ப்பவர்களை ரசிக்க வைப்பதில் ஐயமில்லை.....தன்னை மறந்து புல்லாங்குழல் மீட்டியிருந்தான்..
அமைதியில் அதன் இசை மனதை உருக்கியது...
அங்கு நின்ற மரங்கள் கூட அசையாது ரசித்தது...
நதி கூட அமைதியாய் ஓடியது
பூக்கள் எல்லாம்
தலை சாய்த்து கேட்டது.....சிறிது நேரத்தின் பின்...
மழை வருவதுபோல் இருந்தது சிறிதாய் இடியும் இடித்தது....பாறை மேல்
இருந்தவன் மெல்ல அண்ணார்ந்து வானத்தை பார்த்தான்
சோர்ந்து போயிருந்த அவன் விழிகள் மெல்ல சிரித்தது....மெதுவாய் எழுந்து பக்கத்தில் தெரிந்த குடிசையை நோக்கி போனான்....
அங்க நதியோரம்
ஒரு குடிசை அதை சுற்றி முழுதாய் பூக்கள் நிறைந்த தோட்டம்
கண்ணுக்கு எட்டும் தூரம்வரை....சரி அவனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்...
அவன் பெயர் வினோத்...
சிறு வயதிலே பெற்றோரை இழந்துவிட்டான்....
சொந்தபந்தங்கள் என்று யாருமில்லை
சின்ன வயதில் இருந்து
உண்ண உணவு இல்லாமல்
வீதியில் வாடி
வலியை மட்டும் சுமந்து வாழ்ந்தவன்...
அவனை அந்த நிலையில்
பார்த்த ஒரு பெரியவர்
அவனை தன்னோடு கூட்டிவந்து
அந்த குடிசையில் வைத்துதான் வளர்த்தார்....
சிறிது காலத்தில் அவரும்
இறந்த போக மீண்டும் அனாதையானான்...
