பாகம்..80

194 6 0
                                    

Episode.........80

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

        சுவேதாவுக்கு...
பார்த்திருக்கும்  மாப்பிள்ளை  
   அந்த   பொறுக்கி  ஆகாஷ்
என்று   தெரிந்தபின்....
   அதை  எப்படியாவது   தடுத்து
நிறுத்தனும்   என்று
   முடிவு  செய்தாள்....
ஆயிஷா.......

    நான்...
அங்கிள்   கூட
  பேசி  பார்க்கவா  என்று...
     ஆயிஷா  கேட்கவும்....

ஐயோ...
   வேண்டாம்  டி
என்   டாட்   பற்றிதான்   உனக்கு  தெரியுமே...
அவர்..
   முடிவு  பண்ணினால்
பண்ணியதுதான்...
   அதில்   எந்த  மாற்றமும்  இருக்காது...
அவ்வளவு  பிடிவாதம்..
   உடைந்த  குரலில்  கூறினாள்  சுவேதா.....

அதுக்காக...
அந்த  பொறுக்கியை   கல்யாணம்   பண்ணிக்க  போறியா...

   என்ன  சொல்லுறாய்...
கல்யாணமா..
   அப்படி  ஒன்று   எனக்கு  நடந்தால்
அது...
   வினோத்   கூட  மட்டும்தான்....
என்ற  சுவேதா...
  நான்...
இப்போ  என்ன  செய்றது ஒன்றுமே  புரியல  என்று
அழுதாள்....

    வினோத்...
மனதில் 
   உன்  மீது  காதல்  இல்லை  என்று...
சொல்லி...
   இன்னும்   அவளுக்கு  மரண  வேதனை  கொடுக்க  விரும்பாத  ஆயிஷா...
இப்போது
  அவளை  எப்படியாவது...
அந்த...
   ஆகாஷிடமிருந்து   காப்பாற்றவே  எண்ணினாள்....

   நீ...
அழாத   இப்போ...
  எல்லாவற்றுக்கும்  ஒரு  தீர்வு  இருக்கு...
சும்மா..
அழுதுகிட்டு  இருக்கிறதால்
   எதுவும்   மாறபோவதில்லை...

நான்...
  என்னதான்  பண்ணுறது....
அம்மாவும்...
   டாட்  கூட  சேர்ந்து  அந்த  மாப்பிள்ளையைதான்  கல்யாணம்  பண்ணிக்க  சொல்லுறா...
   எனக்கு...
அழுகிறத  தவிர  வேறு  வழி  தெரியல.....

    சரி...
நீ  இப்போ  அழாமல்   போனை   கட்  பண்ணு...
    இரண்டு  நிமிஷம்  கழித்து
எடுக்கிறேன்....
  என்று
ஆயிஷா   கூறவும்..

   சரி  டி
என்று  சுவேதாவும்...
  அழைப்பை  துண்டித்தாள்....

    அப்போதும்...
நிரோ...
   தமக்கையின்  ரூம்  வெளியே  நின்று...
அக்கா...
  அக்கா  என்று
கூப்பிட்டவாறே  தான்  நின்றாள்......

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now