பாகம்..60

200 5 0
                                    

Episode........60

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

       யாரும்....
சற்று  எதிர்பார்க்காத  விடயத்தை  வினோத்..
   கூறியதும்...
எல்லோரும்
   வாயடைத்துபோய்  நின்றார்கள்...

சுவேதாவை...
சொல்லவே  வேண்டாம்
தான்...
சொல்ல  நினைத்ததை  வினோத்...
   சொன்னதும்...
அப்படியே...
   உறைந்துவிட்டாள்....

வினோத்...
உதட்டிலிருந்துதான்
   அப்படி  வார்த்தைகள்  வந்ததா...
இன்னும்   கூட 
   சுவேதாவால்   நம்பமுடியவில்லை....

கனவா..
அல்லது  நினைவா  தன்  கைகளையே  கிள்ளி  பார்த்தாள்....

ஆயிஷாவும்...
வியப்பின்   உச்சியில்...
அவளால்
   அவன்  சொன்னதை  முழுதாய்  நம்பமுடியவில்லை...

அங்கு  நின்ற...
சுவேதாவின்   தோழி  மயூரி.....
   சுவேதா  காதில்

   ஓய்...
என்னடி  இதெல்லாம்...
   எப்போ  இருந்து...
இதெல்லாம்  நடக்குது
சொல்லவே  இல்லை...

   ஆனாலும்...
நீ
   அமைதியாய்  இருந்து  சாதிச்சிட்டாய்...
   நாங்களே...
அவனை  தூரத்தில்  நின்று  தானே
   ரசிப்போம்...
நெருங்கிபோய்  பேச  பயத்தில்....
பட்
    அவன்...
மனசில்  நீ  இருக்கிறாய்  என்று
   அவனே...
சொல்லும்போது...
   வியப்பா  இருக்கு...
நீ  ரொம்பவே  லக்கியே  தான்   என்றாள்...
  பொறாமையோடு...

    அதை...
கேட்டு  சுவேதா  மனதில்  ஒரு  ஆனந்தம்...
  தன்..
தோழிகளே...
   வினோத்  பற்றி  அப்படி  சொல்லும்போது...
அவள்
மனம்  ஆனந்தம்  கொள்வதில்...
     ஆச்சரியமில்லை  தானே...

எந்த...
பெண்ணிடமும்  அதிகமாய்
தேவையற்று
பேசாத  வினோத்தின்  குணம்...
அனைவரும்
அறிந்தது  ஒன்றுதானே....

அங்கே....
   வினோத்  உதைந்து  தரையில்  விழுந்த  ஆகாஷ்...
   தட்டுதடுமாறி  எழுந்து  நின்றான்...
அவன்...
  முகம்  அவமானத்தில்...
கறுத்து  போனது...
   தன்னை  எல்லோரும்  வெறுப்பாய்  பார்க்கவும்....
   அவன்...
மனசு  கொடிய  மிருகமாய்  மாறியது...

இருளில்  வந்தது  ஒரு  நிலவுTahanan ng mga kuwento. Tumuklas ngayon