Episode...........102
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
நிரோ...
நீ கொஞ்சம் சும்மா இரு...
என்றாள் சுவேதா மறுபடியும்...இனியும்...
அம்மாகிட்ட
மறைக்க முடியாது அக்கா...
நீ...
அமைதியாய் இரு என்று நிரோ கூறவும்...என்னடி...
அவள் சும்மா இரு என்கிறாள்...
நீ..
மறைக்க முடியாது என்கிறாய்...
ஆமாம்...
இங்கு என்னதான் நடக்குது...
மாதவி குழப்பத்தில்....அம்மா...
நீங்க ஒரு மாப்பிள்ளையை பார்த்திருக்கீங்களே...
அந்த பொறுக்கி...
அக்கா..
காலேஜ் போனதிலிருந்து
அக்காகிட்ட
ரொம்ப கீழ்தனமாய் நடந்திருக்கிறான்....
எத்தனையோ...
கஷ்டங்கள் அவனால்...
அக்காவுக்கு வந்திருக்கு அப்போதெல்லாம்
அவளுக்கு துணையாய்
வினோத் தான் இருந்திருக்கிறாரு என்று நிரோ...
சொல்லும் போதே...யாரு...
சுவேதாவை இங்கு கூட்டி வந்து...
விட்டு போன
அந்த பிள்ளைதானே...
என்றார்...
மாதவி இடையில்...ம்.ம்...
அவரே தான்...
அவர் மட்டும் இல்லையென்றால்
அக்காவுக்கு...
அவனால் ரொம்ப கொடுமை நடந்திருக்கும்...
இப்போ...
நடந்ததும் அப்படிதான்...
அந்த பொறுக்கியும் அவன் பிரண்ட்ஸும்
குடிபோதையில்...
அக்காவை கடத்திட்டு போயிருக்காங்க...
வினோத்துதான்
அவங்ககிட்ட இருந்து...
அக்காவை காப்பாற்றினாரு......
அவர்
மட்டும் இல்லையென்றால்...
அக்காவை...
இப்படி பார்த்திருக்க முடியாது
என்று நிரோ கூறவும்.....மாதவி...
உடம்பெல்லாம் நடுங்கியது...என்னம்மா...
இவள் சொல்லுவதெல்லாம்...
உண்மையா என்றார் மாதவி...
சுவேதாவை திரும்பி பார்த்து....அதுவரை...
அமைதியாயிருந்த சுவேதா...
ம்.ம்
என்று தலையசைத்தாள்....
முகத்தில் வலியோடு....
அட கடவுளே...
இப்படியொரு அயோக்கியனா அவன்...
அவனைப்பற்றி
ஏன் முதலில் சொல்லவே இல்லை...
இப்போ...
கூட சொல்லியிருந்தால்...
அவனை
உன் டாட்
ஒரு வழி பண்ணியிருப்பாரே என்று
மாதவி கேட்கவும்....
