பாகம்..16

263 7 0
                                    

🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹

Episode........16

      தன்னை  மறந்து  புல்லாங்குழல்  வாசித்துகொண்டிருந்த   வினோத்...
  காதுகளில்
ஒரு  பெண்  அலறிய  சத்தம்  கேட்டு....
   அதிர்ச்சியாய்...
சத்தம்  வந்த  திசையை  பார்த்தான்...

     ஆனால்  சீனியர்...
சுவேதா...
  தண்ணீரில்  தடுமாறி  விழுந்ததும்...
     அவளை  வெளியே  கூட  தூக்காமல்
பயத்தோடு...
   அங்கிருந்து  வேகமாய்  ஓடிவிட்டார்கள்...

  அவள்
எப்படியாவது   போகட்டும்  என்று....

       திடிரென்று...
தண்ணீரில்  தடுமாறி  விழுந்த  சுவேதா  ரொம்ப  பயந்துபோய்தான்
   கதறினாள்...
அதோடு  சீனியர்  அவளை  தூக்காமல்  அங்கிருந்து...
   ஓடவும்   உயிரே  நின்றுவிட்டது  அவளுக்கு....

   சுவேதா...
தண்ணீரில்  விழுந்த  அடுத்த  நொடி...
     வினோத்...
பாறை  மீதிருந்து  எழுந்து  சத்தம்  வந்த  இடத்துக்கு  வந்தான்.....

     நிலவின்...
ஒளி  தண்ணீரில்   நன்கு படந்திருந்தது....

  அப்போது...
அங்கே  தண்ணீரில்  விழுந்த  சுவேதா
   வெதுவாய்   தட்டுதடுமாறி...
எழுந்து  வந்தாள்....

   அந்த  நொடிதான்
அவளை  நன்கு  பார்த்தான்  வினோத்....
  
  கூந்தலிருந்து....
  நீர்  சொட்ட   ஆடைகள்  நனைந்து
   உடலோடு  ஒட்டியவாறு
தண்ணீரிலிருந்து
வெளியே  வந்தாள்  அவள்.....

அவள்  முகத்தில்....
   நிலாவின்   ஒளி  படவும்....
   வானத்து.....
நிலவுதான்   தவறி  தண்ணீரில்  விழுந்து  விட்டதா....
   வினோத்  எண்ணத்தில்  தோன்றியது...
அவள்  அழகை  கண்டு  ஒரு நொடி  வியந்தான்....

அந்த  இரவிலும்
   அவள்  ஒரு  நிலவுபோல்தான்  இருந்தாள்..

    சுவேதாவும்...
வினோத்தை  கண்டுவிட்டாள்...
   அவன்  உருவம்  சரியாக  அவளுக்கு  தெரியவில்லை....
    ரொம்ப  பயத்தோடு  உள்ளம்  பதற  கைகளை   நெஞ்சோடு...
  இறுக  அணைத்தவாறு  மெல்ல  வெளியே  வந்தவள்....
   அப்போதுதான்....
வினோத்தை  நன்கு  பார்த்தாள்...
  மனசு  திக்கென்றது...
அந்த  பையனா  இது  அவளால்  நம்பமுடியவில்லை...
  நம்பாமலும்  இருக்க முடியவில்லை....
திகைத்துபோய்  அவனை  பார்த்தவாறு  நின்ற  அவளை....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWhere stories live. Discover now