Episode.........77
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
அவரு தன் வீட்டில்...
தரையில் தானே தூங்கி பழக்கம்...
அதுதான்...
மெத்தையில் தூங்காமல் தரையில்...
படுத்திருக்கிறார் போல்...
என்றாள்...
சுவேதா பாவமாய்....ம்.ம்...
இருந்தாலும் பாவமாயிருக்கு அக்கா..
போய்
எழுப்பி மெத்தையில்
தூங்க சொல்லுவோமா...
என்று
நிரோ கேட்டாள்....சீ...
வேண்டாம்...
ஏன் போய் அவர் தூக்கத்தை டஸ்டப் பண்ணுவான்...
நீ வா...
ரூமுக்கு போவோம்...
சுவேதா...
அறையை நோக்கி போனாள்...தமக்கை....
பின்னால்
அறைக்குள்...
வந்த நிரோ...
மெத்தை மீது சாயவும்...சுவேதா...
ஏதோ யோசனையோடு நின்றாள்....என்னக்கா....
யோசிக்கிறாய் வந்து தூங்கு...
என்றாள் நிரோ ...சட்டென...
தன் போர்வையை எடுத்து தரையில்...
விரித்த சுவேதா ...
தலையணையும் எடுத்து தரையில் போட்டுவிட்டு...
அதன் மீது சாய்ந்துவிட்டாள்.....அதை பார்த்து...
வியந்த நிரோ..
என்னக்கா பண்ணுறாய் என்று
மெத்தை மீது எழுந்து அமரவும்...நீ...
மெத்தையில் தூங்கு..
நான்...
தரையிலே தூங்குறேன்...ஓ...
அவரு தரையில் தூங்குறாரு என்று
நீயும்...
தரையில் தூங்க போறியா...
என்ன..
கொடுமைடா இதெல்லாம்....இதில்...
கொடுமை என்ன இருக்கு...
எனக்கு...
தரையில் தூங்க பிடிச்சிருக்கு தூங்கிறேன்...
நீ பேசாமல் படு முதல்.....அது...
எப்படி...
புதுசாய் இன்றைக்கு மட்டும் தரையில் தூங்க
ஆசை வந்தது...
அவரை பார்த்த பின்பு தானே...
நிரோ
விடுவதாயில்லை....சரி...
அப்படியே நினைச்சுக்கோ...
வினோத்...
தரையில் தூங்கிறத பார்த்ததும்...
மனசு...
கஷ்டமா போச்சு...
அதுதான் நானும் தரையில படுத்தேன்...
