🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
Episode.....09
இரண்டு பேரும் கண்டதையும்
கற்பனை பண்ணாமல் பேசாமல்
தூங்குறீங்களா....
என்று...ஆயிஷாவையும் நிரோவையும்
பேசிவிட்டு...
இழுத்து போர்த்திகொண்டு தூங்கினாள் சுவேதா...அடுத்தநாள்...
காலை ஆயிஷா வீட்டிலிருந்து
கிளம்புபோது...மச்சி இன்னும்...
ஐந்து நாள்தான் இருக்கு ரெடியா இரு சுவேதா நக்கலாய் கூறிவிட்டு சென்றாள்....நாட்கள் நகர்ந்தது....
சுவேதா சொன்ன நாளும் வந்தது
ஆமாம் சுவேதா காலேஜ் படிப்பு தொடங்க போகும் நாள்.....வெளியூரில் உள்ள கல்லூரி
காலையில் தந்தையோடு கிளம்ப ரெடியானாள் சுவேதா...
அதை பார்த்த நிரோவின் நிலைதான்
பாவமாய் இருந்தது...
முதல் முறை தமக்கையை பிரியும் சோகம்தான்...
அவளை அதிகம் தாக்கியது...
இதுவரை ஒன்றாய் உண்று உறங்கி சண்டை போட்டவள்...
இனி எப்படி தமக்கையை விட்டு தனியே இருப்பது என்ற...
ஏக்கம் அவள் மனதில்....நினைக்கும்போது...
அவள் விழி எல்லாம் கலங்கியது....அதை பார்த்து...
தங்கை அருகே வந்த சுவேதா...
என்னடா இதெல்லாம்....
சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு....
நான் ரொம்ப தூரம் போகவில்லை தானே...
அதுவும் படிக்கதானே போறேன்...
என்று கூறி...
நிரோவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள் சுவேதா....இருந்தும்...
நிரோ அழுவதை நிறுத்தவில்லை...
வெகுநேரம் தமக்கையை அணைத்தவாறு கண்கலங்கி நின்றாள்....அதை பார்த்து சுவேதா கண்களும் லேசாய்
கலங்கியது....அப்போது...
அங்கே வந்த தாய் மாதவி....
போற டைம் அழுதிட்டு இருக்காமல் சீக்ரம்....
கிளம்பு அப்பா ரெடியாகிட்டார் சுவேதாவை பார்த்து சொன்னவர்...நிரோ...
என்ன இது சின்ன பிள்ளை மாதிரி
அவள் படிக்கதானே போறாள்....
பார்க்கனும் என்று நினைத்தால்....
போய் பார்க்க கூடிய தூரம்தானே.....
