Episode......39
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
ஒரு முடிவோடு...
தன் நண்பர்கள் சூழ காலேஜ் வெளியே வந்த ஆகாஷ் ....அங்கே...
கன்ரீன் முன்னே கண்ட காட்சியால்...
திகைத்துபோய் நின்றான்...
கோபத்தில்
கைகளையும் பிசைந்து கொண்டான்...
ஆமா...
அங்கே கன்ரீன் முன்னால்...
வினோத் நின்றிருந்தான்...
அவன் மட்டுமல்ல அவன் நண்பர்கள் அன்வர் கமலேஷ் சதீஷ் குமரன் என்று இன்னும் சில பேர்கள்...
அவனை சுற்றி நின்றிருந்தார்கள்...அதை...
பார்த்துதான் ஆகாஷ் திகைத்து போய் நின்றான்...மச்சான்...
இவன் தனி ஆள் என்று நினைக்கிறது தப்பு....
கை வைக்கிறதும்...
யோசிச்சுதான் வைக்கனும்....
என்னென்றாலும்....
யோசிச்சு பண்ணு என்றான்...
ஆகாஷ் பக்கத்தில் நின்ற அவன் நண்பன் பிரபு...
ஆகாஷ்...
யோசித்தான்....
அவன் சொல்வதும் சரிதான் என்று....
பின்பு
வேகமாய் பஸ் ஏறுமிடத்துக்கு போனான்...சிலநொடிகளில்...
ஆயிஷாவும் சுவேதாவும் வெளியே வந்தார்கள்....
வழமைபோல்
சுவேதாவின் விழிகள் கன்ரீன் பக்கம்...
அங்கே...
வினோத்தை கண்டதும்...
ஒரு சுகம் அவள் உள்ளத்தில்...இவர்கள்....
இருவரும் காலேஜ் உள்ளே இருந்து வெளியே வருவதை
கண்டதும் வினோத்....
தன் நண்பர்களிடம்...
இருங்கடா...
வாரேன் என்று சொல்லிவிட்டு இவர்கள் பக்கம் வந்தான்...எங்கடா...
போறாய் என்றான் கமலேஷ்...பக்கத்தில்தான்...
இதோ வந்திடுறேன் என்றுவிட்டு வினோத் திரும்பி நடக்கவும்....அன்வர்...
சுவேதாவையும் ஆயிஷாவையும் கண்டுவிட்டு...
வினோத் அவர்களிடம்தான் போகின்றான் என்று...
உணர்ந்தவன்....
சரி மச்சான்....
புரியுது ஏதோ நடக்கட்டும் என்றான் நக்கலாய்...என்ன இப்போ உனக்கு புரியுது...
திரும்பி...
வந்து அன்வரிடம் கேட்டான்
ஆகாஷ்....
