Episode.......02
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
இரவு பெய்த அதிக மழையால்
காலையில் பூக்கள் எல்லாம் செழிப்போடு பூத்து குலுங்கியது....காலையில்
எழுந்த வினோத்
பூக்களை ஒவ்வொன்றாய் மென்மையாய் பறித்து கூடையில்
போட்டான்....இன்று வழமையை விட
அதிக பூக்கள் தோட்டத்தில் மலர்ந்திருந்தன
வினோத் மனசில் சந்தோஷம்
பூக்கள் எல்லாம் பறித்து
இரண்டு பைகளில் போட்டு தன் சைக்களில் பின்னால் வைத்து கட்டினான்....பின்பு...
ஆற்றங்கரைக்கு சென்று சில்லென ஓடு நதியில்
குளித்துவிட்டு
குடிசைக்கு வந்து உடுப்பை மாட்டிக்கொண்டு
சைக்கிளை எடுத்துகொண்டு
வெளியே கிளம்பினான்....முதலாவது
அவன் ஒரு கோவிலுக்குள் நுழைந்து கொண்டு போன பூக்களில்
சில கடவுளுக்கு சாத்தி வணங்கிவிட்டு
பின்...
கோயிலுக்கு முன்னால் வழமையாய் கொடுக்கும் பூக்கடைக்கு பூக்களை கொடுத்துவிட்டு...
அங்கிருந்து கிளம்பி வழமையாய் பூ கொடுக்கும்
இடங்களுக்கு சென்றான்...எல்லாம் கொடுத்து
முடிந்து...
திரும்பிய வினோத்
அந்த ஊரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி முன்னால் இருந்த
சிறிய ரீ கடைக்கு முன்னால்
சைக்கிளை நிறுத்திவிட்டு
உள்ளே போனான்.....அவனை கண்டதும்....
என்ன மச்சான்...
எல்லாம் கொடுத்து முடிஞ்சுதா
என்றான்..
அந்த கடை முதலாளி மேசையில் இருந்த ஒருவன்.....ஓமடா..
என்ற வினோத் அங்கே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தான்....அந்த கடையில்தான்
வினோத் சின்ன சின்ன வேலைகள் செய்து கொடுப்பான்
அதனால் சாப்பாடும் சிறு தொகை பணமும் அவனுக்கு கிடைக்கும்.....அந்த கடை முதலாளி அவன் ஒற்ற வயது
பெயர் கமலேஷ்வினோத்தோடு கமலேஷ் நண்பனாய்தான் பழகினான்....
