🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
Episode.......11
எல்லோரையும்...
பார்த்த உடனே நம்ப கூடாது போக போக தான்
எப்படிபட்டவங்க என்று அறிய முடியும்
இந்த கதையை இப்படியே விடு
யார் நல்லவன் கெட்டவனாய் இருந்தால்
நமக்கு என்ன
நாம இப்ப கொஸ்டல் கிளம்புவமா...
ஆயிஷா...
சொல்லிவிட்டு நடக்க அவள் பின்னே சுவேதாவும் நடந்தாள்.....நாட்கள் நகர்ந்தது...
காலேஜில்...
ஆகாஷ் சுவேதாவோடு நெருங்கி பழக துடித்தான்
சுவேதா அதுக்கு இடம் கொடுக்கவில்லை
தானும் படிப்புமாய் இருந்தாள்...
அவள் குணமே அப்படிதானே.இப்படிதான்..
ஒருநாள் காலேஜ் முடிந்து பஸ்சில் கொஸ்டல் பக்கம் போய்க்கொண்டிருந்தார்கள்...
சுவேதா ஆயிஷா அவள் தோழிகள் சிலர்
ஆகாஷும் அந்த பஸ்சில் போய்க் கொண்டிருந்தான்
தன் நண்பர்களோடு சுவேதாவை பார்க்கும் ஆர்வத்தில்...என்னொரு முக்கியமான ஆளு அந்த பஸ்சில் இருந்தான்
வேறு யாருமில்லை
நம்ம வினோத் தான்.....பஸ்...
மெதுவாய் போய்க்கொண்டிருந்தது
மெல்லிய பாடல்கள் மனதை தொலைத்தவண்ணமிருந்தது...ஒவ்வொருவரும் தங்களோடு இருப்பவர்களிடம்....
அரட்டை அடித்தவாறு இருந்தனர்....சுவேதா ஆயிஷா...
அவள் தோழிகள் சிலர் பஸ்ஸில் நின்று தங்களுக்குள் பேசி சிரித்தவாறு வந்தனர்....ஆகாஷ்...
ஒரு சீட் ஓரம் இருந்து சுவேதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தவாறு இருந்தான்....சுவேதாவின் ஒரு தோழிக்கு பின்னால்தான் வினோத் நின்றான்...
அவன் அருகே உள்ள சீட்டில்
ஒரு பெண்மணி தன் குழந்தையை மடியில் வைத்தவாறு
இருந்தார்....வினோத்...
அந்த குழந்தையிடம்
கண்களால் கதை பேசி சிரிக்க வைத்துகொண்டிருந்தான்.......
