பாகம்..23

240 4 0
                                    

Episode....23

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

      ஏய்  லூசு....
குத்தாதே டி.. வலிக்குது  என்று
    ஆயிஷா  கத்தினாள்...

    வலிகட்டும்...
வலிகட்டும்   சும்மா   இல்லாததை  பொல்லாததை  ...
   பேசிட்டு  இருக்கிறாய்...
சுவேதா  விடாமல்  குத்தினாள்  ஆயிஷாவுக்கு...

   உண்மையை  சொன்னால்...
உனக்கு  கோபம்
    வருதா...
என்று    சுவேதாவை  கட்டில்  மேல்...
   தள்ளிவிட்டு...
ஆயிஷா  தப்பித்துக்கொண்டு  ரூமுக்கு  வெளியே...
   ஓடிவிட்டாள்...

   அப்போது...
மொபைலில்  அழைப்பிலிருந்த  நிரோ...
   நான்  இங்க...
இருக்கிறதை  மறந்திட்டு  சண்டை  போடுறீங்களா...
  என்றாள்...

     உனக்கும்...
சேர்த்துதான்  இங்க  இவ  அடிவாங்கிட்டு  இருக்கா...
   நீ  பக்கத்தில்  இருந்தால்...
   தெரிந்திருக்கும்...
நல்லவேளை  தப்பிவிட்டாய்...
   தமக்கை  கோபமாய்  கூறவும்....

  ஏன்  அக்கா...
இப்ப  கோவபடுறாய்...
   அப்படி  நடந்தால்  எனக்கு  ஹப்பி  தானே..
உன்  மனசுக்கு  பிடிச்சவன்..
   உனக்கு  கிடைக்கனும்...
அதைவிட...
   எனக்கு  என்ன  ஆசை  இருக்க  போகுது..
      நிரோ...
பரிவோடு  கேட்டாள்...

   அவள்..
பரிவில்   சுவேதாவும்...
   சிறு  பிள்ளையாய்...
அது  இல்லடி...
   அவனை...
  இதுவரை
  இரண்டு  மூன்று  இடத்தில்தான்  பார்த்திருக்கிறேன்...
    இதுவரை...
இப்படியான  ஒரு  ஆணை  பார்த்து  இல்லை...
    அது  ஒன்றுதான்...
அவரை  இன்னும்  மனசு  நினைக்க  வைக்குது...
   அதை  விட  வேறு  ஒன்றுமே  இல்லடி...
       சுவேதா  பாவமாய்  கூறவும்....

      இது  போதுமே...
நீ  இதுவரை  எவனையும்  நிமிர்ந்து  பார்த்ததுமில்லை...
    எளிதில்  யாரையும்....
நம்பவும்  மாட்டாய்....
    உன்  மனதில்   இடம்  பிடித்திருக்கிறார்   என்றால்...
   கண்டிப்பா...
நல்லவராய் தான்  இருப்பார்....
   இனி...
உன்  விருப்பம்தான்....
   நீ  பிடித்ததை  செய்....
அதோடு  அங்கே  போனது  படிக்கதான்...
  அதில்...
கவனத்தை  தொலைக்காத....
    அதுக்கு  பிறகுதான்  மற்றவை  எல்லாம்...
நீ  டாக்டர்...
ஆகனும்  என்று  அப்பாவும்  அம்மாவும்...
   ஆசைப்பட்டதை  விட...
       நான்தான்  அதிக  ஆசைப்பட்டேன்....
எல்லாம்...
   மனதில்  இருக்கட்டும்...
நிரோ  பெரிய  மனிசர்   மாதிரி  பேசவும்....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWo Geschichten leben. Entdecke jetzt