Episode....19
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
வெகுநேரம்...
தூக்கம் மறந்து கனாவில் மிதந்த சுவேதா..
நான் இங்கு படிக்க தானே வந்திருக்கிறேன்..
தன் மனசு ஏன் இப்படி அலை பாயுது
என்று
தன்னை தானே கேட்டுக்கொண்டாள்....இருந்தாலும்...
அவள் மனதில் ஒரு ஏக்கம்
அதன் பெயர்தான் என்ன அவளுக்கே புரியவில்லை....
சில நிமிடங்களின்பின்...
அவளை அறியாமல் தூங்கிவிட்டாள்....
அடுத்தநாள்...
காலை கண்ணை கசக்கியவாறு
எழுந்தாள் சுவேதா...
ஏற்க்கனவே எழுந்து குளித்துவிட்டு ரூமுக்கு வந்த...
ஆயிஷா...
என்ன மேடம் கனவு கலைந்து விட்டதா சீக்ரம்
எழும்பிட்டீங்க என்றாள்
நக்கலாய்....போடி...
மோர்னிங்கே கடுபேற்றாமல்
என்றாள் சுவேதா..
சோம்பலை முறித்தவாறு...யாரு இப்ப கடுப்பேத்திறாங்க...
நீங்கதான்
நைட் எங்கையோ போய் வந்தீர்கள்...
கேட்டால்...
உங்க மனசு அங்கு தொலைத்து விட்டு வந்ததுபோல்..
பீல் பண்ணினீங்க...
அவன் கொடுத்த சட்டையை கூட
மாற்றாமல் தூங்கிடீங்க...
இதில் யாரு உங்களை கடுபேற்றியது
மறுபடியும் நக்கலாய்
கூறினாள் ஆயிஷா....அப்போதுதான்...
நைட் வினோத் கொடுத்த அவன் சட்டையோடு...
தூங்கியதை நினைத்து மெல்ல சட்டையை
தடவி பார்த்தாள்....தூக்கம்...
கலைந்த முகத்திலும் ஒரு வெட்கம்...
சுவேதா கன்னங்கள்
லேசாய் சிவந்தது....சரி சரி...
ஓவரா வெட்கபடாமல் சீக்ரம்..
போய் குளிச்சிட்டு வாங்க மேடம்
காலேஜ் கிளம்பனும்
டைம் ஆச்சு என்றவாறு
நிலைக் கண்ணாடி முன்னால் போய் நின்றாள்
ஆயிஷா .....சீ...
போடி என்றுவிட்டு வோஷ் ரூம் போனாள் சுவேதா....சில நாட்கள்
கடந்த நிலையில்...காலேஜ் போகும்போதும் வரும்போதும்
தங்கள்
காலேஜ் முன்னால்
உள்ள கன்ரீன் மீது
சுவேதாவின்
விழிகள் எதையோ தேடுவதை
பல முறை பார்த்த ஆயிஷா....
ஒருநாள்....