Episode......29
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
சுவேதா நம்பிக்கை அற்று...
கலங்கினாலும்....ஆயிஷா...
மனசில் ஒரு யோசனை தோன்றியது....அதுதான்...
சரியென நினைத்தவள்....
கவலையோடு கட்டிலில் சாய்ந்திருந்த சுவேதாவின்...
கையை பிடித்து...
தூக்கி....
...நீ இப்ப எழுந்து றெஸ்ட் மாத்திட்டு சாப்பிடு....
நான் இருக்கிறேன் தானே....
இதை பற்றி
பிறகு யோசிப்போம்
முகத்தை இப்படி வைச்சிருக்காத பார்க்க கஷ்டமா...
இருக்கு என்று...
ஆயிஷா கூறவும்....சுவேதாவும்....
ஏதோ.
ஒரு நம்பிக்கையில்....
விழிநீரை துடைத்துவிட்டு...
கையில் டவலை எடுத்துக்கொண்டு வோஷ் ரூம்...
பக்கம் போனாள்.....ஈவிங்...
ஆகியும் சுவேதா நார்மலாய் இல்லை...
நடந்ததையே...
நினைத்து யோசித்துக்கொண்டிருந்தாள்....சுவே...
ரெடியாகு கொஞ்சம்...
வெளியே போய் வருவோம் என்றுவிட்டு...
நிலைக்கண்ணாடி முன் நின்று...
தலை சீவினாள் ஆயிஷா....என்னடி...
இந்த டைம் வெளியே...
நான்...
வரல நீ போய்ட்டு வா என்றாள் சுவேதா... வெறுமை நிறைந்த...
குரலில்....லூசு மாதிரி...
இப்படி யோசித்துக்கொண்டிருந்து...
உதை வாங்காத...
முதல் எழும்பி ரெடியாகு....
வெளியே போய் வந்தால்....
மனசு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்...
ஆயிஷா...
கொஞ்சம் உரிமையாய் சொன்னாள்....வெளியே...
போகதான் எனக்கு பயமே..
இதில்...
என்னடி மைண்ட் ரிலாக்ஸ்....
ப்ளீஸ்...அதெல்லாம்....
முடியாது...
அந்த நாய்க்கு பயந்துகொண்டு...
இப்படியே..
அடைபட்டு இருக்க போறியா...
முடியாது..
நீ கிளம்பு முதல்...
நம்மை மீறி என்ன நடக்க போகுது...
ஆயிஷா...
கோபம் கூறவும்....அதன்பின்...
சுவேதா மறுக்க முடியாமல்...
எழுந்து...
வெளியே போக ரெடியானாள்....
