பாகம்..51

180 6 0
                                    

Episode......51

🌹இருளில்  வந்தது  ஒரு  நிலவு🌹

   யாரோ...
அவன்  பெயர்  சொல்ல  கேள்விபட்டவள்
   பின்...
அவன்  யாரென்று
  அறியாமல்  தவறாய்  புரிந்து  கொண்டாள்..
அவனைபற்றி  அறிந்ததும்
நான்  தேடியவனே
  நீதான்  என்று  எண்ணி  மகிழ்ந்தாள்...
அவன்  நிஜத்தில்
  தன்னையும்  தொலைத்தாள்....
இன்று...
   அவன்  வீட்டில்  தன்  தாய்  தங்கையோடு...
   எண்ணி  பார்க்கும்போது
சுவேதாவுக்கு
எல்லாம்...
  கனவா  என்று  கூட  நினைக்க  தோன்றியது......

   ஒவ்வொரு...
சந்திப்புக்களும்  பிரிவுகளும்...
  ஏதோ  ஒரு  காரணத்தோடுதான்  நிகழ்கின்றது....
  அதுவே  யதார்த்தம்....

     உள்ளே  போன  வினோத்...
தானும்...
   கையில்  காப்பியுடன்   வெளியே
  வந்தான்.....

   அங்கே....
மாதவி  மட்டும்  தனியே  இருப்பதை  கண்டு....

  அவங்க  எங்கே
  போய்டாங்க  அன்ரி
   என்றான்  வினோத்..

காப்பி...
குடிச்சு  முடிச்சிட்டு...
   கதைச்சுகிட்ட  அப்படியே...
நடந்து  போனாளுகள்....
   என்று...
மாதவி  கூறவும்....

   அவர்  சொன்ன  பக்கம்  பார்த்தான்  வினோத்....
   மூவரும்...
பூஞ்சோலைகளை  தாண்டி
   நதிக்கரை  பக்கம்
நடந்து  போய்கொண்டிருந்தார்கள்....
   சரி...
போய்ட்டு  வரட்டும்  என்று...
   எண்ணியவன்...
ஏதோ...
   யோசித்துவிட்டு   உள்ளே  சென்று...
தரையில்...
   விரிப்பதற்க்காய்...
ஒரு  பாய்  எடுத்து  வந்தான்....
  பின்
   அங்கே...
பூமரங்களுக்கு  நடுவே  பச்சைநிற  புல்  வெளியில்...
   அந்த  பாயை  விரித்து....

அன்ரி...
  நீங்க
  இங்கே  உட்காருங்க...
அவங்க
கதைச்சு  பேசி  முடிச்சிட்டு
ஆறுதலாய்
வரட்டும்  என்றான்....

   சரிப்பா...
என்றுவிட்டு  அங்கே  உட்கார்ந்த  மாதவி...
   நீயும்...
உட்கார்ந்துக்கோ...
   என்றார்...
வினோத்தை  பார்த்து....

   அவனும் 
தலையசைத்தவாறு....
   கூச்சத்தோடு  ஒரு  பக்கமாய்  உட்கார்ந்து  கொண்டான்.....

இருளில்  வந்தது  ஒரு  நிலவுWo Geschichten leben. Entdecke jetzt