Episode.......48
🌹இருளில் வந்தது ஒரு நிலவு🌹
உண்மையில்....
வினோத் யாருமில்லாத ஒரு அனாதை என்று...
மாதவிக்கும் நிரோவுக்கும் தெரியாது...
அதனால்தான்...
யதார்த்தமாய்...
மாதவி அப்படி கேட்டார்....தாய்...
அப்படி கேட்டதும் சுவேதா முகம் சட்டென மாறியது...
அவனுக்கு யாருமே இல்லை என்று
அவள் எப்படி சொல்லுவாள்....வினோத்...
முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை..
மெதுவாய் நிமிர்ந்து
மாதவியை பார்த்தவன்...
என் கூட இருக்க அவங்களுக்கு பிடிக்கல...
போல
அதுதான்...
எனக்கு விபரம் தெரிய முன்பே...
என்னைவிட்டு
எல்லோரும்...
போய்ட்டாங்க என்றான்...
வெறுமையான குரலில்...இதை கேட்டு திகைத்தார்...
மாதவி...
நிரோவும் கூட...என்னப்பா...
சொல்லுறாய் எங்கே போய்ட்டாங்க...
புரியாமல்
மாதவி....எனக்கு...
இரண்டு வயது இருக்கும் போதே...
ஒரு விபத்தில்
அம்மாவும் அப்பாவும்...
என்னைவிட்டு...
போய்ட்டாங்க நான் மட்டும் ஏதோ அதிஷ்டவசமா உயிர் பிழைத்தேன் என்று சொல்லுவாங்க...
வீதியில்..
அனாதையாய்
கிடந்த என்னை...
ஒரு பெரியவர்தான் எடுத்து வளர்த்தாரு.....
என்று வினோத் சொல்லி முடிக்கவும்...மாதவியின்...
முகம் இடிந்து போனது...நிரோவை...
சொல்லவே வேண்டாம்...
அப்படியே..
உடைந்து போனாள்.....
அவள்
எதிர்பார்க்காத ஒன்று அல்லவா அது...இந்த
விடயத்தை அக்கா...
ஏன் தன்னிடம் கூறவில்லை என்று
சுவேதாவை
திரும்பி பார்க்கவும்...சுவேதாவின்...
விழிகள்
வினோத் மேல் சாய்ந்திருந்தது...
கஷ்டப்பட்டு கண்ணீரை மறைத்தவாறு
அவள்
இமைகள்...அவன்..
கை பிடித்து தன் தோளோடு
அவனை சாய்த்துக்கொள்ள அவளின்...
தாய்மை கொண்ட உள்ளமும்
ஏங்கியது....
